Published:Updated:

அரசு மரியாதையுடன் கோபிநாத் முண்டே உடல்தகனம்; மகள் தீ மூட்டினார்!

Vikatan Correspondent
அரசு மரியாதையுடன் கோபிநாத் முண்டே உடல்தகனம்; மகள் தீ மூட்டினார்!
அரசு மரியாதையுடன் கோபிநாத் முண்டே உடல்தகனம்; மகள் தீ மூட்டினார்!
அரசு மரியாதையுடன் கோபிநாத் முண்டே உடல்தகனம்; மகள் தீ மூட்டினார்!

மும்பை: சாலை விபத்தில் நேற்று மரணமடைந்த மத்திய ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் கோபிநாத் முண்டேவின் இறுதிச் சடங்கு அரசு மரியாதையுடன் அவரது சொந்த ஊரில் நடைபெற்றது..முண்டேவின் சடலத்திற்கு அவரது மகள் பங்கஜா முண்டே தீ மூட்டினார்.

கோபிநாத் முண்டே டெல்லியில் நேற்று கார் விபத்தில் சிக்கியபோது மாரடைப்பு காரணமாக மரணம் அடைந்தார். அதனைத் தொடர்ந்து டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையிலிருந்து முண்டேவின் உடல், பொதுமக்களின் அஞ்சலிக்காக டெல்லியில் உள்ள பா.ஜனதா தலைமை அலுவலகத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.

தலைவர்கள் அஞ்சலி செலுத்தியதும் கோபிநாத் முண்டேயின் உடல் பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக நேற்று மாலை தனி விமானம் மூலம் மும்பைக்கு கொண்டு வரப்பட்டது. ஒர்லியில் உள்ள அவரது வீட்டுக்கு உடல் கொண்டு வரப்பட்டது. அங்கு கோபிநாத் முண்டே உடலுக்கு பொதுமக்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.

இதனையடுத்து கோபிநாத் முண்டே உடல் பீட் மாவட்டத்தில் உள்ள அவரது சொந்த ஊரான பரேலி கிராமத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு ஏராளமான கட்சி தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் முண்டேவின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.

அரசு மரியாதையுடன் கோபிநாத் முண்டே உடல்தகனம்; மகள் தீ மூட்டினார்!

அதனைத் தொடர்ந்து அவரது உடலுக்கு முழு அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு நடைபெற்றது. மதியம் 2 மணி அளவில் முண்டேவின் உடல் தகனம் செய்யப்பட்டது சிதைக்கு முண்டேவின் மகள் பங்கஜா முண்டே தீ மூட்டினார்.

இறுதிச்சடங்கு நிகழ்ச்சியில் ராஜ்நாத் சிங், வெங்கையா நாயுடு, ஸ்மிரிதி இரானி உள்ளிட்ட பா.ஜனதா கட்சியின் தலைவர்கள் இறுதி சடங்கு நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.