Published:Updated:

வீட்டுக்காவல் கேட்ட சஹாரா தலைவர் மனு தள்ளுபடி!

Vikatan Correspondent
வீட்டுக்காவல் கேட்ட சஹாரா தலைவர் மனு தள்ளுபடி!
வீட்டுக்காவல் கேட்ட சஹாரா தலைவர் மனு தள்ளுபடி!
வீட்டுக்காவல் கேட்ட சஹாரா தலைவர் மனு தள்ளுபடி!

புதுடெல்லி: வீட்டுக்காவலில் வைக்கக்கோரிய சஹாரா குழுமத் தலைவர் சுப்ரதா ராயின் மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

முதலீட்டாளர்களுக்கு ரூ.20 ஆயிரம் கோடியை திரும்பத் தரவில்லை என சஹாரா நிறுவனத் தலைவர் சுப்ரதா ராய் மீது வழக்கு தொடரப்பட்டது.

சிறையில் உள்ள சுப்ரதா ராயின் ஜாமீனுக்கு ரூ.10 ஆயிரம் கோடியைத் தர வேண்டும் என உச்ச நீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில், வீட்டுக்காவலி்ல் வைக்கக்கோரி சுப்ரதா ராய் உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். இந்த மனுவை இன்று தள்ளுபடி செய்த உச்ச நீதிமன்றம், ஜாமீன் தொகைக்காக அசையா சொத்துக்களை சஹாரா நிறுவனம் விற்க அனுமதி அளித்தது.