Published:Updated:

வேலூரில் மர்ம கும்பல் துப்பாக்கிச் சூடு: ஒருவர் படுகாயம்!

Vikatan Correspondent
வேலூரில் மர்ம கும்பல் துப்பாக்கிச்  சூடு:   ஒருவர் படுகாயம்!
வேலூரில் மர்ம கும்பல் துப்பாக்கிச் சூடு: ஒருவர் படுகாயம்!
வேலூரில் மர்ம கும்பல் துப்பாக்கிச்  சூடு:   ஒருவர் படுகாயம்!

வேலூர்: வேலூரில் மர்ம கும்பல் துப்பாக்கியால் சுட்டதில் ஒருவர் படுகாயம் அடைந்துள்ளார்.

வேலூர் மாவட்டம் மேல்பாடி கிராமத்தில்  இரு சக்கர வாகனத்தில் வந்த 4 பேர் கொண்ட ஒரு மர்ம கும்பல், கையில் வைத்திருந்த கைத்துப்பாக்கியால் வானத்தை நோக்கி முதலில் சுட்டுள்ளனர். அதைத் தொடர்ந்து அங்கிருந்த ரேணுகோபால் என்பவரை நோக்கி சுட்டுள்ளனர்.

அதில் ரேணுகோபால் காலில் துப்பாக்கி குண்டு பாய்ந்தது. இதையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். மேலும், இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.