Published:Updated:

தாதாக்களை வைத்து ப்ரீத்தி ஜிந்தா மிரட்டுவதாக நெஸ்வாடியா புகார்!

Vikatan Correspondent
தாதாக்களை வைத்து ப்ரீத்தி ஜிந்தா மிரட்டுவதாக நெஸ்வாடியா புகார்!
தாதாக்களை வைத்து ப்ரீத்தி ஜிந்தா மிரட்டுவதாக நெஸ்வாடியா புகார்!
தாதாக்களை வைத்து ப்ரீத்தி ஜிந்தா மிரட்டுவதாக நெஸ்வாடியா புகார்!

மும்பை: தாதாக்களை வைத்து ப்ரீத்தி ஜிந்தா மிரட்டுவதாக, அவரது முன்னாள் காதலரும், தொழிலதிபருமான நெஸ்வாடியா காவல்துறையில் புகார் அளித்துள்ளார்.

ஐ.பி.எல். கிரிக்கெட்டின் பஞ்சாப் அணி உரிமையாளரும், பாலிவுட் நடிகையுமான ப்ரீத்தி ஜிந்தா, அவரது முன்னாள் காதலரும், ஐ.பி.எல். பஞ்சாப் அணியின் துணை உரிமையாளரும், தொழிலதிபருமான நெஸ்வாடியா மீது கடந்த சில தினங்களுக்கு முன்பு காவல்துறையினர் புகார் அளித்தார்.

அந்த புகாரில், ''கடந்த மே மாதம் 30ஆம் தேதி மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் ஐ.பி.எல். போட்டி நடந்தபோது, நெஸ்வாடியா எனது கையை பிடித்து இழுத்து என்னிடம் தவறாக நடக்க முயற்சித்தார். மேலும், அவதூறாக என்னை பேசினார்'' எனக் கூறியிருந்தார். இதையடுத்து நெஸ்வாடியா மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், தாதாக்களை வைத்து பிரீத்தி ஜிந்தா மிரட்டுவதாக தொழிலதிபர் நெஸ்வாடியா காவல்துறையில் புகார் செய்துள்ளார்.

இதுகுறித்து அவரது சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள புகார் மனுவில், ''பிரீத்தி ஜிந்தா சம்மந்தப்பட்ட அனைத்து தொழில் நிறுவனங்களில் இருந்தும் என்னை விலகுமாறு தாதாக்களை வைத்து மிரட்டுகிறார். மேலும் எனது தந்தையும், ‘பாம்பே டையிங்’ தொழில் அதிபருமான நுஸ்லி வாடியாவுக்கும் போனில் தாதாக்கள் மிரட்டல் விடுத்து வருகின்றனர்'' எனக் கூறியுள்ளார்.

புகாரை ஏற்றுக்கொண்ட காவல்துறையினர் அதன் மீது மேல் விசாரணை நடத்துவதற்காக தாதாக்கள் தொடர்பான விசாரணை பிரிவுக்கு அனுப்பி வைத்தனர்.