Published:Updated:

மரண தண்டனை விதிக்கப்பட்ட 5 பேரின் கருணை மனுக்கள் நிராகரிப்பு!

Vikatan Correspondent
மரண தண்டனை விதிக்கப்பட்ட 5 பேரின் கருணை மனுக்கள் நிராகரிப்பு!
மரண தண்டனை விதிக்கப்பட்ட 5 பேரின் கருணை மனுக்கள் நிராகரிப்பு!
மரண தண்டனை விதிக்கப்பட்ட 5 பேரின் கருணை மனுக்கள் நிராகரிப்பு!

புதுடெல்லி: மரண தண்டனை விதிக்கப்பட்ட சுரேந்தர் கோலி உள்ளிட்ட 5 பேரின் கருணை மனுக்களை மத்திய அரசு நிராகரித்துள்ளது.

நொய்டா அருகே உள்ள, நித்தாரி கிராமத்தில், பல்வேறு இளம்பெண்கள் மற்றும் குழந்தைகளை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் சுரேந்தர் கோலிக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.

இதையடுத்து, அவர் மத்திய அரசுக்கு கருணை மனு அனுப்பினார். இதேபோல், பல வழக்குகளில் தொடர்புடைய மேலும் 4 குற்றவாளிகளும் கருணை அனுப்பியிருந்தனர்.

இந்நிலையில், சுரேந்தர் கோலி உள்ளிட்ட 5 பேரின் கருணை மனுக்களை மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நிராகரித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.