Published:Updated:

மக்கள் விரோத முடிவுகளை புதிய அரசு எடுத்தால் அமைதியாக இருக்க முடியாது: மம்தா பானர்ஜி

கொல்கத்தா: மக்கள் விரோத முடிவுகளை புதிய அரசு எடுத்தால் அமைதியாக இருக்க முடியாது என்று மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.

இது தொடர்பாக மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி சட்டசபையில் பேசும்போது, ''சில வாக்குறுதிகளின் அடைப்படையில்தான் ஒரு ஜனநாயக அரசு ஆட்சிக்கு வருகிறது. ஆனால் இன்றைய அரசியலில், தேர்தலுக்கு முன்னால் சொன்னதை எல்லாம் ஆட்சிக்கு வந்தபின் கடைபிடிப்பதில்லை.

நல்லாட்சி வழங்குவோம் என்று கூறிவிட்டு மக்கள்விரோத முடிவுகளை எடுக்கிறார்கள். ரயில் கட்டணம் உயர்த்தப்படுவதால், அனைத்து பொருட்களின் விலைகளும் உயரும். எனவே மக்கள் சந்திக்கும் பிரச்னைகளை கருத்தில் கொண்டு ரயில் கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும்.

சமையல் எரிவாயு சிலிண்டருக்கான மானியத்தை திரும்ப பெறப்போவதாகவும் தகவல் வந்துள்ளது. இது சாதாரண மக்களின் சமையலறையை பாதிக்கும். ஒரு புதிய அரசுக்கு அவகாசம் கொடுக்க வேண்டும். ஆனால் முதல் நாளிலேயே இதுபோன்ற மக்கள் விரோத முடிவுகளை எடுத்தால் அமைதியாக இருக்க முடியாது. புதிய அரசு அமைதியாக, மென்மையாக மக்கள் நலனுக்கான முடிவுகளை எடுக்க வேண்டும்" என்றார்.