Published:Updated:

திரைப்பட இயக்குனர் ராம.நாராயணன் உடல் தகனம்: படப்பிடிப்புகள் ரத்து!

விகடன் விமர்சனக்குழு
திரைப்பட இயக்குனர் ராம.நாராயணன் உடல் தகனம்: படப்பிடிப்புகள் ரத்து!
திரைப்பட இயக்குனர் ராம.நாராயணன் உடல் தகனம்: படப்பிடிப்புகள் ரத்து!
திரைப்பட இயக்குனர் ராம.நாராயணன் உடல் தகனம்: படப்பிடிப்புகள் ரத்து!

சென்னை: சிறுநீரக கோளாறு காரணமாக மரணமடைந்த திரைப்பட இயக்குனர் ராம.நாராயணன் உடல் இன்று தகனம் செய்யப்பட்டது. இதனையொட்டி படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டன.

பிரபல திரைப்பட இயக்குனர் ராம.நாராயணன் சிறுநீரக கோளாறு காரணமாக சிங்கப்பூரில் உள்ள ஒரு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். நேற்று முன்தினம் சிகிச்சை பலன் அளிக்காமல் அவர் மரணம் அடைந்தார். அவருடைய உடல் விமானம் மூலம் நள்ளிரவு சென்னைக்கு கொண்டு வரப்பட்டது.

விமான நிலையத்தில் இருந்து வேன் மூலம் சென்னை மகாலிங்கபுரத்தில் உள்ள அவருடைய வீட்டுக்கு எடுத்து வரப்பட்ட ராம.நாராயணனின் உடல்,  அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அவரது உடலுக்கு  நடிகர்கள் கமல்ஹாசன், விஜயகாந்த், இயக்குனர் பாரதிராஜா உள்ளிட்ட தமிழ் திரையுலகைச் சேர்ந்த  ஏராளமானோர், பொதுமக்கள், அரசியல் பிரமுகர்கள் உள்ளிட்ட்டோர் அஞ்சலி செலுத்தினர்.

அதனைத் தொடர்ந்து, இன்று பிற்பகல்  ராம.நாராயணன் உடல் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு கண்ணம்மாப்பேட்டை சுடுகாட்டில் தகனம் செய்யப்பட்டது.

திரைப்பட இயக்குனர் ராம.நாராயணன் உடல் தகனம்: படப்பிடிப்புகள் ரத்து!

ராம.நாராயணன் மறைவையொட்டி, சென்னையில் இன்று சினிமா படப்பிடிப்புகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டன. திரைப்படம் தொடர்பான அனைத்து வேலைகளும் நடைபெறவில்லை.  இதற்கு திரையுலகில் உள்ள அனைத்து சங்கங்களும் ஒத்துழைப்பு அளித்ததாக தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் தெரிவித்தது.

படங்கள்: ஆ. முத்துக்குமார்