Published:Updated:

ரயில் கட்டண உயர்வு நாளை முதல் அமல்: கட்டணம் வசூலிக்க டிடிஆர் தயார்!

சென்னை: உயர்த்தப்பட்ட ரயில் பயணிகள் கட்டண உயர்வு நாளை முதல் அமலுக்கு வருகிறது.

நாளை அல்லது அதற்கு பிந்தைய தேதிகளில் பயணம் செய்ய முன்பதிவு செய்த பயணிகளுக்கும் இந்த கட்டண உயர்வு பொருந்தும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

உயர்த்தப்பட்ட ரயில் கட்டணம், பயணம் தொடங்குவதற்கு முன்பு டிக்கெட் பரிசோதகர்கள் அல்லது முன்பதிவு அதிகாரிகள் மூலம் பயணிகளிடம் வசூலிக்கப்படும் என ரயில்வே நிர்வாகம் கூறியுள்ளது.

இதற்காக, சென்னை சென்ட்ரல், எழும்பூர், தாம்பரம், அரக்கோணம் போன்ற சில முக்கிய ரயில் நிலையங்களில் பிரத்யேகமாக சிறப்பு கவுண்டர்கள் இன்று முதல் திறக்கப்பட உள்ளது. மேலும் கூடுதலான டிக்கெட் பரிசோதகர்கள் நியமிக்கப்பட உள்ளனர் என்று தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

சென்னை கோட்டத்தில் மட்டும் சராசரியாக ஒரு லட்சத்து 30 ஆயிரம் பேர் மின்சார ரயிலுக்கான சீசன் டிக்கெட் வைத்துள்ளனர். கட்டண உயர்வு அறிவிக்கப்பட்டபோதிலும் 25ஆம் தேதிக்கு முன்னர் சீசன் கட்டணத்தை புதுப்பித்தவர்களிடம், புதிய கட்டணம் வசூலிக்கப்படுமா? என்பது குறித்து அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் தெரிவிக்கப்படவில்லை.