Published:Updated:

என்.எல்.சி ஒப்பந்த தொழிலாளர்கள் 200 பேர் பணி நிரந்தரம்!

விகடன் விமர்சனக்குழு
என்.எல்.சி ஒப்பந்த தொழிலாளர்கள் 200 பேர் பணி நிரந்தரம்!
என்.எல்.சி ஒப்பந்த தொழிலாளர்கள் 200 பேர் பணி நிரந்தரம்!
என்.எல்.சி ஒப்பந்த தொழிலாளர்கள் 200 பேர் பணி நிரந்தரம்!

சென்னை: ஒப்பந்த தொழிலாளர்கள் 200 பேரை முதல் கட்டமாக பணி நிரந்தரம் செய்ய என்.எல்.சி நிர்வாகம் ஒப்புதல் அளித்துள்ளது.

நெய்வேலி என்.எல்.சி நிறுவனத்தில் 13 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஒப்பந்த தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். அவர்களை பணி நிரந்தரம் செய்ய கோரி தொழிற்சங்கங்கள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன.

இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், ஒப்பந்த தொழிலாளர்கள் 10,624 பேரை பணி நிரந்தரம் செய்ய கடந்த ஆண்டு உத்தரவிட்டது. ஆனால், ஓராண்டுக்கு மேல் ஆகியும் ஒப்பந்த தொழிலாளர்கள் பணி நிரந்தம் செய்யப்படவில்லை.

இந்நிலையில், ஒப்பந்த தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்வது தொடர்பான பேச்சுவார்த்தை நெய்வேலியில் இன்று நடைபெற்றது. இந்த பேச்சுவார்த்தையில் என்.எல்.சி நிர்வாகத்தினரும், அண்ணா தொழிற்சங்கம் மற்றும் தொழிலாளர் முன்னேற்ற சங்கம் ஆகிய தொழிற்சங்கங்களும் பங்கேற்றன.

அப்போது, முதல் கட்டமாக 750 பேரை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று தொழிற்சங்கங்கள் சார்பில் வலியுறுத்தப்பட்டது. ஆனால், முதல் கட்டமாக 200 பேரை பணி நிரந்தரம் செய்வதாக என்.எல்.சி தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

பல மணி நேரத்திற்கும் மேல் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் 200 பேரை பணி நிரந்தரம் செய்வது என உடன்பாடு ஏற்பட்டது. படிப்படியாக மற்ற தொழிலாளர்களும் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் என்று தொழிற்சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.