Published:Updated:

குற்றாலத்தில் மது, எண்ணெய் குளியலுக்கு ஐகோர்ட் தடை!

விகடன் விமர்சனக்குழு
குற்றாலத்தில் மது, எண்ணெய் குளியலுக்கு ஐகோர்ட் தடை!
குற்றாலத்தில் மது, எண்ணெய் குளியலுக்கு ஐகோர்ட் தடை!

சென்னை: குற்றாலம் அருவி பகுதியில் மது விற்பனையை தடை செய்ய உத்தரவிட்டுள்ள சென்னை உயர் நீதிமன்றம், குற்றாலத்தில் கடைபிடிக்க வேண்டிய 37 உத்தரவுகளை பிறப்பித்துள்ளது.

குற்றாலத்தில் மது, எண்ணெய் குளியலுக்கு ஐகோர்ட் தடை!

நெல்லை மாவட்டம், குற்றாலத்தில் அடிப்படை வசதி கோரி தாக்கல் செய்ய வழக்கில் இன்று தீர்ப்பளித்த உயர் நீதிமன்றம் பிளாஸ்டிக், எண்ணெய், சீயக்காய், ரசாயனப் பொருட்கள், சோப்பு உள்ளிட்டவை பயன்படுத்தக் கூடாது என்று உத்தரவிட்டுள்ளது.

மகளிர் உடை மாற்றும் அறை, கழிப்பறை வசதி, ஆம்புலன்ஸ், காவல் நிலையம் அமைக்கவும் உத்தரவிட்டுள்ள நீதிமன்றம், குற்றாலத்தில் கண்காணிப்பு கேமரா, அதிக வெளிச்சம் உள்ள விளக்கு பொருத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.

மேலும், குற்றாலம் அருவியில் மது விற்பனைக்கும் உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.