Published:Updated:

ஆணுறையைவிட ஒருவனுக்கு ஒருத்தி என்பதே மிகவும் பாதுகாப்பானது: ஹர்ஷ்வர்தன்

புதுடெல்லி: ஆணுறையைவிட ஒருவனுக்கு ஒருத்தி என்பதே மிகவும் பாதுகாப்பானது என்று அமைச்சர் ஹர்ஷ்வர்தன் கூறியுள்ளார்.

மத்திய சுகாதாரத்தறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் வெளிநாட்டு நாளிதழ் ஒன்றுக்கு பேட்டியளித்தபோது, ''எய்ட்ஸை கட்டுப்படுத்த ஆணுறை அணியுங்கள் என்று பிரசாரம் செய்வது மலிவானது. இந்திய கலாச்சாரத்தில் ஒருவனுக்கு ஒருத்தி என்பதை கடைபிடிக்க வேண்டும் என்பது நியதியாகும்.

அந்த நியதியை கடைபிடித்து நம்பமாக செயல்பட்டால் எய்ட்ஸ் நோய் உருவாகாமல் தடுக்கமுடியும். மாறாக தவறான பாலியல் உறவில் ஈடுபடும்போது ஆணுறை உபயோகியுங்கள் என்று அரசாங்கமே கூறுவது, தவறான செயலை ஆதரிப்பது போல் உள்ளது. இது நமது கலாசாரத்தை சீரழிக்கும் செயல்.

மேலை நாடுகளின் கலாச்சாரங்களை நாம் பின்பற்ற வேண்டியதில்லை. கணவன்-மனைவி இருவரும் பரஸ்பர நம்பத்தன்மையோடு நடந்து கொண்டால் இயல்பாகவே எய்ட்ஸ் வராமல் தடுத்து விடமுடியும். பின் எதற்கு ஆணுறை" என்று அவர் கூறியுள்ளார்.

மத்திய அமைச்சரின் இந்த கருத்துக்கு, தன்னார்வு தொண்டு நிறுவனங்கள் கண்டனம் தெரிவித்துள்ளது.இதனிடையே தாம் கூறியது தவறாக புரிந்துகொள்ளப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.