Published:Updated:

இளவரசன் நினைவு தினம்: தர்மபுரியில் 144 தடை

இளவரசன் நினைவு தினம்: தர்மபுரியில் 144 தடை
இளவரசன் நினைவு தினம்: தர்மபுரியில் 144 தடை
இளவரசன் நினைவு தினம்: தர்மபுரியில் 144 தடை

தர்மபுரி: இளவரசன் நினைவு தினம் ஜூலை 4ஆம் தேதி அனுசரிக்கப்படுவதையொட்டி தர்மபுரியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இளவரசன் - திவ்யா காதல் திருமணத்தால் தர்மபுரி  நத்தம்  காலனியில் கடந்த 2012ல் கலவரம் ஏற்பட்டது.

இந்நிலையில்,  கடந்தாண்டு ஜூலை 4ஆம் தேதி, இளவரசன் ரயில் தண்டவாளத்தில் பிணமாக கண்டெடுக்கப்பட்டார். அவர் ரயில் முன் பாய்ந்து  தற்கொலை செய்து கொண்டதாக தெரிவிக்கப்பட்டது.

இச்சம்பவம் நடந்து ஓராண்டு முடிவடைய உள்ள நிலையில், இளவரசன் நினைவு தினத்தை  அனுசரிக்கும் வகையில் பல்வேறு அமைப்பினர் ஊர்வலம் மற்றும்  அமைதி கூட்டம் நடத்த காவல்துறையினரிடம் அனுமதி கோரியிருந்தனர்.

இதனிடையே, தர்மபுரி  தாலுகா பகுதியில் நேற்று முன்தினம் நள்ளிரவு  முதல் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.