Published:Updated:

கட்டட விபத்துக்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை தேவை: சிரஞ்சீவி ஆவேசம்

Vikatan Correspondent
கட்டட விபத்துக்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை தேவை: சிரஞ்சீவி ஆவேசம்
கட்டட விபத்துக்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை தேவை: சிரஞ்சீவி ஆவேசம்

சென்னை: போரூரை அடுத்த முகலிவாக்கத்தில் 11 மாடி கட்டடம் இடிந்து விழுந்த விபத்திற்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆந்திர நடிகரும், முன்னாள் அமைச்சருமான சிரஞ்சீவி ஆவேசமாக தெரிவித்தார். 
 

கட்டட விபத்துக்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை தேவை: சிரஞ்சீவி ஆவேசம்


போரூரை அடுத்த முகலிவாக்கத்தில் கடந்த சனிக்கிழமை மாலை 11 மாடி கட்டடம் இடிந்து விழுந்து பெரும் விபத்து ஏற்பட்டது. இதில் இதுவரை 27 பேர் இறந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளனர். இன்னும் பலர் உயிருடன் மீட்கப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில், விபத்து நடந்த இடத்தை அரசியல் பிரமுகர்கள் பார்வையிட்டு வருகின்றனர். இச்சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்கள் பெரும்பாலானோர் ஆந்திராவை சேர்ந்தவர்கள் என்பதால் நேற்று காலை சீமாந்திரா முதலவர்  சந்திரபாபு நாயுடு சம்பவ இடத்தை பார்வையிட்டு நடந்த சம்பவத்தை அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.
 

கட்டட விபத்துக்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை தேவை: சிரஞ்சீவி ஆவேசம்

அதைத்தொடர்ந்து பிரபல நடிகருமான முன்னாள் காங்கிரஸ் எம்.பியுமான சிரஞ்சீவி விபத்து நடந்த இடத்தை பார்வையிட்டார். பின்னர் மருத்துவமனையில் சிகி்ச்சை பெற்றுவருபவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அவர். “இது முற்றிலும் மனித தவறுகளால் விளைந்த பயங்கரம். இதற்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக முதல்வரின்  உத்தரவின்படி மீட்பு பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது. இருப்பினும் இந்த பணியை இன்னும் துரிதப்படுத்தினால் மட்டுமே இடிபாடுகளுக்கிடையே சிக்கியவர்களை முழுமையாக உயிருடன் மீட்கமுடியும்" என்றார்.

மேலும், பாதிக்கப்பட்டவர்களுக்கான நிதியை மேலும் 50 ஆயிரம் கூடுதலாக வழங்க ஆந்திர முதல்வர் உத்தரவிடவேண்டும் என்றும் சிரஞ்சீவி கேட்டுக்கொண்டார்.

படங்கள்: பாலசுப்ரமணியன்