Published:Updated:

முகலிவாக்கத்தில் மற்றொரு 11 மாடி கட்டடத்திற்கு சீல் வைப்பு!

முகலிவாக்கத்தில் மற்றொரு 11 மாடி கட்டடத்திற்கு சீல் வைப்பு!
முகலிவாக்கத்தில் மற்றொரு 11 மாடி கட்டடத்திற்கு சீல் வைப்பு!

முகலிவாக்கத்தில் மற்றொரு 11 மாடி கட்டடத்திற்கு சீல் வைப்பு!

சென்னை: முகலிவாக்கத்தில் இடிந்த கட்டடத்திற்கு அருகில் உள்ள மற்றொரு 11 மாடி கட்டடத்திற்கு சி.எம்.டி.ஏ அதிகாரிகள் சீல் வைத்தனர்.
 

முகலிவாக்கத்தில் மற்றொரு 11 மாடி கட்டடத்திற்கு சீல் வைப்பு!

போரூரை அடுத்த முகலிவாக்கத்தில் 11 மாடிகள் கொண்ட இரண்டு அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டு வந்தன. இங்கு, தமிழ்நாடு மற்றும் ஆந்திராவை சேர்ந்த 100க்கு மேற்பட்டவர்கள் வேலை செய்து வந்தனர்.

இதனிடையே, கடந்த 28ஆம் தேதி மாலை இரண்டு அடுக்குமாடி கட்டடங்களில் ஒன்று, திடீரென இடிந்து விழுந்தது. இந்த விபத்தில் 27 பேர் பலியாகியுள்ளனர். மேலும், இடிபாடுகளில் சிக்கியிருப்பவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது.

இந்நிலையில், கட்டடத்தின் அருகில் உள்ள 11 மாடி கட்டடம் பாதுகாப்பு இல்லாதது என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தமிழக அரசிடம் அறிக்கை தாக்கல் செய்திருந்தது.

இதன் அடிப்படையில், காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் பாஸ்கர் முன்னிலையில்  சி.எம்.டி.ஏ அதிகாரிகள் இன்று 11 மாடி கட்டடத்திற்கு சீல் வைத்தனர்.

இதனிடையே, முகலிவாக்கத்தில் துர்நாற்றம் வீசுவதால் கட்டடம் இடிந்து விழுந்த இடத்தில் ஈக்கொல்லி மருந்து, பிளீச்சிங் பவுடர்களை சென்னை மாநகராட்சி ஊழியர்கள் தெளித்து வருகின்றனர்.

படம்: பாலசுப்ரமணியன்

அடுத்த கட்டுரைக்கு