Published:Updated:

பலாத்கார பேச்சு: மன்னிப்பு கோரினார் திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.!

Vikatan Correspondent
 பலாத்கார  பேச்சு: மன்னிப்பு கோரினார் திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.!
பலாத்கார பேச்சு: மன்னிப்பு கோரினார் திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.!
 பலாத்கார  பேச்சு: மன்னிப்பு கோரினார் திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.!

கொல்கத்தா: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பெண்களை பாலியல் பலாத்காரம் செய்ய தனது கட்சியினரை ஏவி விடுவேன் எனக் கூறிய திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி., கட்சித் தலைமையின் உத்தரவையடுத்து தனது பேச்சுக்காக மன்னிப்பு கோரினார்.

கொல்கத்தாவில் கட்சித் தொண்டர்களிடையே பேசிய திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. தபஸ் பால், "மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியினரை தாக்கினால், அவர்களை சுட்டுத் தள்ளுவோம். தேவைப்பட்டால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிப் பெண்களை பாலியல் வன்கொடுமை செய்யும்படி தனது கட்சியினரை கேட்டுக்கொள்வேன். தைரியம் இருந்தால் தன்னைக் கட்டுப்படுத்திப் பார்க்கட்டும்" என்று சவால் விடுத்தார்.

தபஸ் பாலின் இந்த பேச்சுக்கு நாடு முழுவதும் இருந்து எதிர்ப்பு கிளம்பியுள்ளது. தேசிய மகளிர் ஆணையமும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், இந்த பேச்சுக்காக  நிபந்தனையற்ற மன்னிப்புக் கோர வேண்டும் என தபஸ் பாலுக்கு திரிணாமுல் காங்கிரஸ் கட்சி உத்தரவிட்டது.

இதனையடுத்து அவர் தனது பேச்சுக்காக மன்னிப்புக் கோரியுள்ளார்.

 மனைவியும் மன்னிப்புக் கேட்டார்

இதனடையே தபஸ் பாலின் மனைவி நந்தினி, தனது கணவரின் பேச்சுக்காக மன்னிப்பு கேட்டுக் கொள்வதாக கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், ''எனது கணவரின் பேச்சை ஆதரிப்பேன் என்ற பேச்சுக்கே இடமில்லை. அவரது பேச்சுக்காக நான் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன். எனது கணவர் இவ்வாறு பேசியதற்கு இன்னொரு காரணமும் இருக்கிறது. அதுதான் அவரை மிகவும் கோபம் அடையச் செய்து, இவ்வாறு பேச வைத்து விட்டது. அந்த சம்பவம் வெகு நாட்களுக்கு முன்பு நடந்தது'' என்றார்.

இருப்பினும், பழைய சம்பவம் குறித்து அவர் விரிவாக எதையும் தெரிவிக்கவில்லை.