Published:Updated:

பழ.நெடுமாறன் தலைமையில் புதிய கட்சி உதயம்!

Vikatan Correspondent
பழ.நெடுமாறன் தலைமையில் புதிய கட்சி உதயம்!
பழ.நெடுமாறன் தலைமையில் புதிய கட்சி உதயம்!
பழ.நெடுமாறன் தலைமையில் புதிய கட்சி உதயம்!

சென்னை: தமிழகத்திலுள்ள 60க்கும் மேற்பட்ட தமிழ் தேசிய அமைப்புகளின் ஒருங்கிணைப்புடன் தமிழர் தேசிய முன்னணி என்ற புதிய கட்சி உருவாக்கப்பட்டுள்ளது. இதற்கு பழ.நெடுமாறன் தலைவராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

இதுகுறித்து உலக தமிழர் பேரமைப்பு தலைவர் பழ.நெடுமாறன் செய்தியாளர்களிடம் கூறுகையில், ''தமிழகத்தில் உள்ள தேசிய உணர்வாளர்கள் மற்றும் பல்வேறு தமிழ் தேசிய அமைப்புகளை ஒருங்கிணைப்பதற்கான கூட்டம் நடந்தது. இதில் 60க்கும் மேற்பட்ட தமிழ் தேசிய அமைப்புகளை சேர்ந்தவர்களும், 400க்கும் மேற்பட்ட தமிழ் தேசிய உணர்வாளர்களும் கலந்து கொண்டனர்.

அந்த கூட்டத்தில் அனைவரும் இணைந்து தமிழர் தேசிய முன்னணி என்ற கட்சியை உருவாக்குவது என்று முடிவு செய்யப்பட்டு, அந்த கட்சிக்கு என்னை (பழ.நெடுமாறன்) தலைவராக தேர்ந்தெடுத்துள்ளனர். இந்த கட்சிக்கான கொடியும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இந்த கொடியின் மேலே நீல வண்ணமும், கீழே மஞ்சள் வண்ணம் இருக்கிறது. கொடியிலுள்ள நீல வண்ணம் என்பது உலகம் முழுவதும் பரவி இருக்கும் தமிழர்களை குறிக்கும். மஞ்சள் வண்ணம் தமிழர்களின் வீரம் மற்றும் பண்பாட்டை குறிக்கும். இது அரசியல் கட்சியாக விரைவில் பதிவு செய்யப்படவுள்ளது'' என்றார்.