Published:Updated:

நீதிபதி நியமன விவகாரம்: மத்திய அரசு மீது தலைமை நீதிபதி அதிருப்தி!

Vikatan Correspondent
நீதிபதி நியமன விவகாரம்: மத்திய அரசு மீது தலைமை நீதிபதி அதிருப்தி!
நீதிபதி நியமன விவகாரம்: மத்திய அரசு மீது தலைமை நீதிபதி அதிருப்தி!
நீதிபதி நியமன விவகாரம்: மத்திய அரசு மீது தலைமை நீதிபதி அதிருப்தி!

புதுடெல்லி: நீதிபதி நியமன விவகாரத்தில் மத்திய அரசு நடந்துகொண்டவிதம் குறித்து தலைமை நீதிபதி கடும் அதிருப்தி தெரிவித்துள்ளார்.

உச்சநீதிமன்ற புதிய நீதிபதிகள் நியமன பட்டியலில் கோபால் சுப்பிரமணியத்தின் பெயர் இடம் பெற்றிருந்தது. ஆனால், இதற்கு மத்திய அரசு எதிர்ப்பு தெரிவிப்பதாக செய்திகள் வெளியாகியது.

இதையடுத்து, நியமன பட்டியலில் இருந்து கோபால் சுப்பிரமணியம் விலகியிருந்தார். மேலும், தமது நியமனத்திற்கு எதிராக அரசு சி.பி.ஐ.யை பயன்படுத்துவதாக கோபால் சுப்பிரமணியம் புகார் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், நியமன பட்டியலில் இருந்து கோபால் சுப்பிரமணியத்தின் பெயர் நீக்கப்பட்டது தொடர்பாக மத்திய அரசை சாடியுள்ள தலைமை நீதிபதி ஆர்.எம்.லோதா, தமது சம்மதம் இல்லாமலேயே நியமன பட்டியலில் இருந்து கோபால் சுப்பிரமணியத்தின் பெயர் நீக்கப்பட்டதாகவும், நீதித்துறையின் சுதந்திரம் எந்த வகையிலும் சமரசம் செய்துக்கொள்ளப்படாது  என்றும் கூறியுள்ளார்.

அதே சமயம் தனது பிரச்னையை கோபால் சுப்பிரமணியம் தெரிவித்த விதம் அதிருப்தி அளிப்பதாகவும் லோதா தெரிவித்துள்ளார்.