Published:Updated:

75% பயணத்தை நிறைவு செய்த மங்கள்யான் செவ்வாயை நோக்கி செல்கிறது!

விகடன் விமர்சனக்குழு
75% பயணத்தை நிறைவு செய்த மங்கள்யான் செவ்வாயை நோக்கி செல்கிறது!
75% பயணத்தை நிறைவு செய்த மங்கள்யான் செவ்வாயை நோக்கி செல்கிறது!
75% பயணத்தை நிறைவு செய்த மங்கள்யான் செவ்வாயை நோக்கி செல்கிறது!

ஸ்ரீஹரிகோட்டா: செவ்வாய்க் கிரகத்தில் ஆய்வு மேற்கொள்ள இந்தியா சார்பில் அனுப்பப்பட்ட மங்கள்யான் விண்கலம், 75 சதவிகித பயணத்தை நிறைவு செய்துள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.

செவ்வாய் கிரகத்தில் உயிர் இருப்பதற்கான சாத்தியக்கூறுகள், கனிம வளம், தண்ணீர் இருப்பதற்கான தடயங்கள் போன்றவற்றை ஆராய்வதற்காக மீத்தேன் சென்சார் உள்ளிட்ட 5 கருவிகளுடன் 450 கோடி ரூபாய் செலவில் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து பி.எஸ்.எல்.வி. சி-25 ராக்கெட் மூலம் கடந்த நவம்பர் 5ஆம் தேதி மங்கள்யான் விண்ணில் ஏவப்பட்டது.

மங்கள்யான் விண்கலமானது இதுவரை 510 மில்லியன் கி.மீ. தூரம் பயணித்துள்ளது. இந்த விண்கலத்தை அதன் புவி வட்டப் பாதையில் சீராகச் செல்ல வைக்கும் விதமாக, கடந்த மாதம் 11ஆம் தேதி சில மேம்பாட்டுப் பணிகள் செய்யப்பட்டன. அடுத்த கட்டப் பணிகள் அடுத்த மாதத்தில் மேற்கொள்ளப்பட உள்ளன.

செப்டம்பர் 24ஆம் தேதி மங்கள்யான் விண்கலமானது செவ்வாய்க் கிரகத்தை சென்றடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.