Published:Updated:

7 மாநிலங்களுக்கு புதிய கவர்னர்கள்: நாளை அறிவிப்பு வெளியாகலாம்!

7 மாநிலங்களுக்கு புதிய கவர்னர்கள்: நாளை அறிவிப்பு வெளியாகலாம்!
7 மாநிலங்களுக்கு புதிய கவர்னர்கள்: நாளை அறிவிப்பு வெளியாகலாம்!
7 மாநிலங்களுக்கு புதிய கவர்னர்கள்: நாளை அறிவிப்பு வெளியாகலாம்!

புதுடெல்லி: 7  மாநிலங்களில் நியமிக்கப்படும் புதிய கவர்னர்களின் பெயரை நாளை மத்திய அரசு நாளை வெளியிடக்கூடும் என டெல்லி  தகவல்கள் தெரிவிக்கின்றன.
 
மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான புதிய அரசு பதவியேற்றதை தொடர்ந்து, முந்தைய காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசால் நியமிக்கப்பட்ட கவர்னர்களை, பதவி விலக கூறியதாக தகவல் வெளியானது.
  
இதைத்தொடர்ந்து, முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் நியமிக்கப்பட்ட உத்தரபிரதேச ஆளுநர் பி ஜோஷி, சத்தீஸ்கர் ஆளுநர் சேகர் தத் மற்றும் நாகாலாந்து ஆளுநர் அஸ்வினி குமார் ஆகியோர் பதவி விலகினார். இதனையடுத்து ஹெலிகாப்ட ஊழல் வழக்கில் சிபிஐ விசாரணை மேற்கொண்டதையடுத்து மேற்கு வங்காள ஆளுநர் எம்.கே. நாராயணன், கோவா ஆளுநர் பீ வாஞ்சூ பதவி விலகினர்.

இதற்கிடையே,  கர்நாடக ஆளுநர் பரத்வாஜ், திரிபுரா ஆளுநர் தேவானந்த் கன்வர் ஓய்வு பெற்றனர். திரிபுரா ஆளுநர் தேவானந்த் கன்வர் 2009-ஆம் ஆண்டு ஜூன் 29ஆம் தேதி பீகார் ஆளுராக நியமிக்கப்பட்டார். அதன்பிறகு திரிபுரா ஆளுநராக மாற்றம் செய்யப்பட்டார்.

இந்த நிலையில், இந்த 7 மாநிலங்களின் புதிய ஆளுநர்களின் பெயர் பட்டியல் நாளை மத்திய அரசு வெளியிடக்கூடும் என டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.