Published:Updated:

அரசு பள்ளி சத்துணவில் பாம்பு: 54 மாணவர்களுக்கு வாந்தி மயக்கம்!

விகடன் விமர்சனக்குழு
அரசு பள்ளி சத்துணவில் பாம்பு: 54 மாணவர்களுக்கு வாந்தி மயக்கம்!
அரசு பள்ளி சத்துணவில் பாம்பு: 54 மாணவர்களுக்கு வாந்தி மயக்கம்!
அரசு பள்ளி சத்துணவில் பாம்பு: 54 மாணவர்களுக்கு வாந்தி மயக்கம்!

சீதாமரி: பீகாரில் உள்ள ஒரு அரசு பள்ளியில் இன்று மதியம் வழங்கப்பட்ட சத்துணவில் பாம்பு கிடந்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன.

பீகார் மாநிலம், சீதாமரி மாவட்டத்தில் இயங்கி வரும் அரசு தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு வழக்கம் போல் இன்று மதியம் சத்துணவு வழங்கப்பட்டது. இந்த சத்துணவில் பாம்பு கிடந்தது தெரியவந்துள்ளது. இந்த சத்துணவை சாப்பிட்ட 54 மாணவர்களுக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டது. இதையடுத்து, அவர்கள் அனைவரும் அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து உணவுத்துறை அதிகாரிகள் கூறுகையில், ''மாணவர்களுக்கு வழங்கப்பட்ட உணவை சோதனை செய்த போது அதில் கருப்பு நிறத்தில் நீளமாக பொருள் ஒன்று கிடப்பது தெரியவந்தது. அது பாம்பாக இருக்கலாம் என்று கருதுகிறோம். அதை சோதனைக்காக அனுப்பியுள்ளோம்'' என்றனர்.

கடந்த ஆண்டு பீகாரின் சரண் மாவட்டத்தில் தர்மஸதி கிராமத்தில் உள்ள தொடக்கப்பள்ளியில் சத்துணவு சாப்பிட்ட 23 குழந்தைகள் பலியானது குறிப்பிடத்தக்கது.