Published:Updated:

பணவீக்கத்தை கட்டுப்படுத்தி வளர்ச்சியை அதிகரிக்க நடவடிக்கை: அருண்ஜெட்லி

Vikatan Correspondent

புதுடெல்லி: பணவீக்கத்தை கட்டுப்படுத்தி வளர்ச்சியை அதிகரிக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என மத்திய நிதியமைச்சர் அருண்ஜெட்லி கூறியுள்ளார்.

இன்று (17ஆம் தேதி) மக்களவையில் நடந்த மத்திய பட்ஜெட் மீதான விவாதத்துக்கு மத்திய நிதியமைச்சர் அருண்ஜெட்லி பதிலளித்து பேசுகையில், ''மத்திய பட்ஜெட்டில் வளர்ச்சிக்கான பாதை மட்டும்தான் காட்டப்பட்டுள்ளது. பல்வேறு மானியக் கொள்கைகளை சரி செய்ய வேண்டியது தற்போதைய அவசியமாக உள்ளது.

பணவீக்கத்தை கட்டுப்படுத்தி வளர்ச்சியை அதிகரிக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. முன்தேதியிட்ட வரிவிதிப்பால் நிறுவனங்கள் பாதிக்கப்படுகின்றன'' என்றார்.