Published:Updated:

மும்பையில் 22 மாடி கட்டடத்தில் தீ விபத்து: தீயணைப்பு வீரர் பலி!

Vikatan Correspondent
மும்பையில் 22 மாடி கட்டடத்தில் தீ விபத்து: தீயணைப்பு வீரர் பலி!
மும்பையில் 22 மாடி கட்டடத்தில் தீ விபத்து: தீயணைப்பு வீரர் பலி!

மும்பை: மும்பையில் 22 மாடி வணிக வளாக கட்டடம் ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் ஒரு தீயணைப்பு வீரர் பலியாகியுள்ளார். 6 பேர் காயம் அடைந்துள்ளனர்.

மும்பை அந்தேரியில் 22 மாடி கொண்ட லோட்டஸ் பார்க் என்ற வணிக வளாகம் உள்ளது. இந்த கட்டடத்தில் ராகேஷ் ரோஷன், அஜய் தேவ்கான் உள்ளிட்ட திரையுலக பிரமுகர்களின் அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன.

இந்நிலையில், இந்த கட்டடத்தின் 21வது மாடியில் இன்று திடீரென தீ விபத்து ஏற்பட்டது. அப்போது காற்று பலமாக வீசியதால் 20வது மாடிக்கும் தீ பரவியது.

மும்பையில் 22 மாடி கட்டடத்தில் தீ விபத்து: தீயணைப்பு வீரர் பலி!

இது குறித்து தகவல் அறிந்ததும் 12 தீயணைப்பு வாகனங்களில் வந்த வீரர்கள் தீயணைப்பு பணியில் ஈடுபட்டனர். இந்த கட்டத்தில் இருந்தவர்களையும் உடனடியாக அப்புறப்படுத்தினர். இந்நிலையில் கட்டத்தின் மேல் தளத்தில் 30 பேர் சிக்கியுள்ளதாக தகவல் வெளியானது. தீ கொழுந்து விட்டு எரிந்ததால், தீயணைப்பு வீரர்களால் மேல் தளத்திற்கு செல்ல இயலவில்லை.

இதையடுத்து, கடற்படை ஹெலிகாப்டருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஹெலிகாப்டர்களும் மீட்பு பணியில் ஈடுபட்டன. மேல் தளத்தில் சிக்கியுள்ளவர்ளை கயிறு மூலம் ஹெலிகாப்டர்கள் மீட்டன. இந்த தீ விபத்தில் சிக்கியிருந்த தீயணைப்பு வீரர்களும் மீட்கப்பட்டனர். இருப்பினும், இந்த விபத்தில் தீயணைப்பு ஒருவர் பலியாகி உள்ளதாகவும், 6 பேர் காயம் அடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து தீ எரிந்து வருவதால், தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.  தீ விபத்திற்கான காரணம் இதுவரை தெரியவில்லை.