Published:Updated:

செய்திச் சுருக்கம்: ஆகஸ்ட் 08, 2011

செய்திச் சுருக்கம்: ஆகஸ்ட் 08, 2011

செய்திச் சுருக்கம்: ஆகஸ்ட் 08, 2011

செய்திச் சுருக்கம்: ஆகஸ்ட் 08, 2011

செய்திச் சுருக்கம்: ஆகஸ்ட் 08, 2011

Published:Updated:
செய்திச் சுருக்கம்: ஆகஸ்ட் 08, 2011

அமெரிக்கா தனது உயர்தர கிரெடிட் ரேட்டிங்கை இழந்துள்ளதன் எதிரொலியாக, ஐரோப்பா மட்டுமின்றி ஆசிய பங்குச்சந்தைகளிலும் திங்கட்கிழமை கடும் வீழ்ச்சி ஏற்பட்டது. ##~~##

மும்பை பங்குச்சந்தையில் திங்கட்கிழமை வர்த்தகம் நிறைவடைந்தபோது, சென்செக்ஸ் 315 புள்ளிகள் வீழ்ச்சி கண்டிருந்தது. நிஃப்டி 92 புள்ளிகள் சரிந்திருந்தது.

இந்த நிலையில், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி நிலை வலுவான அடித்தளத்தைக் கொண்டது என்றும், அமெரிக்காவின் நெருக்கடியால் சில தாக்கங்களை எதிர்கொள்ளும் சூழல் இருந்தாலும், அதனை உரிய முறையில் சமாளிக்க முடியும் என்று நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி தெரிவித்துள்ளார்.

*

காமன்வெல்த் போட்டி முறைகேடு தொடர்பாக நாடாளுமன்றத்தில் பிஜேபி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி உறுப்பினர்கள் கடும் அமளியில் ஈடுபட்டதால் இரு அவைகளும் திங்கட்கிழமை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.

சிஏஜி அறிக்கையை சுட்டிக்காட்டிய பிஜேபி உறுப்பினர்கள் டெல்லி முதல்வர் தீட்சித் உடனடியாக பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தினர்.

அதேபோல், காமன்வெல்த் விளையாட்டு போட்டிகளின் ஒருங்கிணைப்புச் செயலாளராக சுரேஷ் கல்மாடியை தேசிய ஜனநாயக கூட்டணி அரசு தான் நியமித்தது என்று கூறிய மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் அஜய் மக்கானுக்கு எதிராகவும் அவர்கள் கோஷமிட்டனர்.

இதனிடையே, சுரேஷ் கல்மாடி விவகாரத்தில், அமைச்சர் அஜய் மக்கானுக்கு எதிராக உரிமை மீறல் சிறப்பு தீர்மானத்தை பிஜேபி மக்களவையிலும் மாநிலங்களவையிலும் கொண்டு வந்தது.

இதன் தொடர்ச்சியாக, அமைச்சர் அஜய் மக்கானின் அறிக்கை மீது நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்த மத்திய அரசு ஒப்புதல் தெரிவித்துள்ளது.

*
சமச்சீர் கல்வி தொடர்பான வழக்கில், உச்ச நீதிமன்றம் அளிக்கும் தீர்ப்பை தமிழக அரசு நடைமுறைப்படுத்தும் என்று சட்டப் பேரவையில் முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

*
சுதந்திரத் தமிழ் ஈழ தேசதுக்கான பொது வாக்கெடுப்பை அனைத்து உலகப் பார்வையாளர்கள் கண்காணிப்பில் நடத்துவது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தரில் வரும் 12-ம் தேதி தனது தலைமையில் மதிமுக அறப்போர் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அக்கட்சியின் பொதுச் செயலர் வைகோ அறிவித்துள்ளார்.

*
சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளில் தேங்கியுள்ள குப்பைகளை உடனடியாக அகற்றவும்; குடியிருப்புப் பகுதிகளில் தேங்கியுள்ள அசுத்தமான நீரை அகற்றுவதற்குமான சிறப்பு தூய்மைப்படுத்தும் திட்டம் செயல்படுத்தப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா சட்டப்பேரவையில் இன்று அறிவித்தார்.

மேலும், இந்தச் சிறப்பு தூய்மைப்படுத்தும் திட்டத்தின் கீழ் தூய்மைப்படுத்தும் பணிகள் 3 மாதத்தில் முடிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

*
காற்றாலை மூலம் பெறப்படும்  சுமார் 100 மெகாவாட் மின்சாரத்தை பயன்படுத்திக்கொள்ள இசைவு தெரிவிக்கும் உயர் அழுத்த தொழிற் சாலைகளுக்கு வழங்கும் செயல் திட்டம் திங்கட்கிழமை முதல் நடைமுறைப் படுத்தப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

*
ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டத்தை அடுத்த முதல்வர் ஜெயலலிதா தொடங்கிவைப்பார் என உள்ளாட்சித் துறை அமைச்சர் கேபி.முனுசாமி சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளார்.

*
இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்ஷே அதிகாரப்பூர்வ பயணமாக செவ்வாய்க்கிழமை சீனா செல்கிறார். இந்தப் பயணத்தின் போது இரு நாடுகளுக்கு இடையே பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகவுள்ளன.

*
சென்னையில் திங்கட்கிழமை ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு 2,302 ரூபாயாக இருந்தது.

*
வேகப்பந்து வீச்சாளர் ஜாகீர் கான் காயம் காரணமாக விலக நேர்ந்தாலும், இங்கிலாந்துக்கு எதிரான தொடரை இந்திய அணி சமன் செய்யும் வாய்ப்பு இருப்பதாக முன்னாள் கேப்டன் செளரவ் கங்குலி நம்பிக்கைத் தெரிவித்துள்ளார்.

*
முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் படுதோல்வியடைந்த இந்திய அணி, புதன்கிழமை துவங்கும் 3-வது டெஸ்டில் பதிலடி கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!