Published:Updated:

ராணியை மறந்து விட்ட ராணிப்பேட்டை!

ராணியை மறந்து விட்ட ராணிப்பேட்டை!
ராணியை மறந்து விட்ட ராணிப்பேட்டை!

ராணிப்பேட்டை உருவாக காரணமாக இருந்த ராணி மண்டபத்தை பாதுகாக்கவும், அதன் அழிவை தடுக்கவும் யாரும் இல்லாத பரிதாப நிலை உருவாகியுள்ளது.

ராணியை மறந்து விட்ட ராணிப்பேட்டை!

வேலூர் மாவட்டத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் வரலாற்று சின்னங்களை ஏந்தி நிற்கும் இடங்களுள் ராணிப்பேட்டையும் ஒன்று. இங்கு விசேஷம் என்னவென்றால் வரலாற்று நிகழ்ச்சியின் நினைவாகவே ராணிப்பேட்டை நகரம் நிறுவப்பட்டதுதான். ஆனால், ராணிப்பேட்டை தன் வரலாற்றை மறந்து நிற்கிறது என்பது வருத்தப்படக்கூடிய ஒன்றுதான்.

ராணியை மறந்து விட்ட ராணிப்பேட்டை!

'ராணிப்பேட்டை'  பெயர் காரணம்

வரலாற்றில் வாழும் அரசர்களில் தேசிங்கு ராஜா மிக முக்கியமானவர். 'தேஜ் சிங்' எனப்பட்ட இவர் மக்களால் 'தேசிங்கு ராஜா' என அழைக்கப்பட்டார். இவருக்கும் ஆற்காடு நவாப் சாதுல்லாகான் என்பவருக்கும் நடைபெற்ற போரில் தேசிங்கு ராஜா கொல்லப்பட்டார். அவர் உடல் எரிக்கப்பட்ட போது அவர் மனைவி 'ஜீன்ஜீ' எனப்பட்ட ராணிபாயும் உடன்கட்டை ஏறினார்.

ராணியை மறந்து விட்ட ராணிப்பேட்டை!

இந்த நிகழ்ச்சியால் ஆச்சரியப்பட்ட சாதுல்லாகான், ராணிக்கும் ராஜாவுக்கும் தனித்தனியாக ஒரு மணிமண்டபம் ஆற்காடு பாலாற்றின் வடகரையில் அமைத்தார். அத்துடன் அந்த மணிமண்டபங்களுக்கு, ராணியின் நினைவாக அவர் பெயரின் முதல் பாதியை எடுத்து 'ராணிப்பேட்டை' என்று பெயர் வைத்தார்.

ஆனால், இன்று ராணிப்பேட்டை உருவாக காரணமாக இருந்த ராணி மண்டபத்தை பாதுகாக்கவும், அதன் அழிவை தடுக்கவும் யாரும் இல்லாத பரிதாப நிலை உருவாகியுள்ளது. அன்பின் வடிவமாகவும், தியாகத்தின் சின்னமாகவும் வாழ்ந்த 'ராணிபாயின்' மணிமண்டபம் இன்று மது அருந்தும் இடமாகவும், இரவில் விபச்சாரங்கள் நடக்கும் இடமாகவும் மாறியுள்ளது.

ராணியை மறந்து விட்ட ராணிப்பேட்டை!

இதுகுறித்து நிலத்தின் உரிமையாளரிடம் விசாரித்தால் இந்த இடத்தை அரசு குறைவான விலைக்கு கையகப்படுத்த நினைக்கிறது என்றும், இது தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ளது என்றும் கூறினார்.

வரலாற்று நினைவுகள் நிறைந்த இடம், இன்று உறங்கும் இடமாகிப் போனது.

- மு. வாசு (மாணவப் பத்திரிகையாளர்)

 படங்கள்: ச. வெங்கடேசன்

அடுத்த கட்டுரைக்கு