Published:Updated:

14 ஆண்டுகளாக உண்ணாவிரதம் இருந்து வரும் பெண் போராளி ஷர்மிளா மீண்டும் கைது!

விகடன் விமர்சனக்குழு

இம்பால்: மணிப்பூரில் ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்தை ரத்து செய்யக் கோரி, 14 ஆண்டுகளாக உண்ணாவிரதம் இருந்து வரும் இரோம் ஷர்மிளா மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார்.

மணிப்பூரில் ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்தை ரத்து செய்யக் கோரி பெண் போராளி இரோம் ஷர்மிளா 14 ஆண்டுகளாக உண்ணாவிரதம் இருந்து வருகிறார். மூக்கு வழியாக அவருக்கு திரவ உணவு வழங்கப்பட்டு வருகிறது.

மருத்துவமனை அறையிலேயே சிறை வைக்கப்பட்டிருந்த ஷர்மிளாவை இரண்டு நாட்களுக்கு முன்பு நீதிமன்றம் விடுதலை செய்து உத்தரவிட்டது.

இந்நிலையில் மீண்டும் போராட்டத்தை ஷர்மிளா தொடங்கியுள்ளார். இதையடுத்து, அவரை காவல்துறையினர் இன்று கைது செய்தனர்.