Published:Updated:

புகைப்பழக்கத்தை ஒழிப்பதில் முன்னோடியாக திகழும் ராஜஸ்தான்!

 புகைப்பழக்கத்தை ஒழிப்பதில் முன்னோடியாக திகழும் ராஜஸ்தான்!
புகைப்பழக்கத்தை ஒழிப்பதில் முன்னோடியாக திகழும் ராஜஸ்தான்!
 புகைப்பழக்கத்தை ஒழிப்பதில் முன்னோடியாக திகழும் ராஜஸ்தான்!

ஜெய்ப்பூர்: புகைப்பழக்கத்தை ஒழிப்பதில் முன்னோடியாக திகழும் ராஜஸ்தான் மாநிலத்தில், மேலும் 2 மாவட்டங்கள்  புகைப்பழக்கம் இல்லா மாவட்டங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.

ராஜஸ்தானில் ஏற்கனவே ஜுன்ஜுஹுனு மற்றும் ஜோத்பூர் ஆகிய மாவட்டங்கள் புகைப்பழக்கம் இல்லா மாவட்டங்களாக அறிவிக்கப்பட்டிருந்தன. இந்நிலையில் தற்போது  மேலும் 2  புகைப்பழக்கம் இல்லா மாவட்டங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.

மாவட்டங்களில் புகைப்பழக்கத்தை ஒழிக்கும் விதமாக அஜ்மீர் மற்றும் அல்வார் மாவட்டங்களை புகைப்பழக்கம் அற்ற மாவட்டங்களாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
 
இதனுடன் சேர்த்து தற்போது 4 மாவட்டங்கள் புகைப்பழக்கம் இல்லா மாவட்டங்களாக அறிவிக்கப்பட்டிருப்பதன் மூலம், புகையிலை ஒழிப்பில் ராஜஸ்தான் மாநிலம் இந்தியாவுக்கே முன்னோடியாக திகழ்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.