Published:Updated:

டீ போட்டுத் தர தாமதமானதால் மனைவி குத்திக் கொலை!

விகடன் விமர்சனக்குழு
டீ போட்டுத் தர தாமதமானதால் மனைவி குத்திக் கொலை!
டீ போட்டுத் தர தாமதமானதால் மனைவி குத்திக் கொலை!
டீ போட்டுத் தர தாமதமானதால் மனைவி குத்திக் கொலை!

புவனேஸ்வர்: டீ போட்டுக் கொடுக்க தாமதம் ஆனதால் ஏற்பட்ட வாக்குவாதத்தில் கோபமுற்று, மனைவியை குத்திக் கொன்ற கணவர் கைது செய்யப்பட்டார்.
 
ஒடிஷா மாநிலம் தென்கனல் மாவட்டத்தில் உள்ள குஹாலிபால் கிராமத்தைச் சேர்ந்தவர் 56 வயதான மஹாலியா நாயக். கடந்த திங்களன்று காலை தன் மனைவி ஜனாவிடம் டீ போட்டு தருமாறு கேட்டுள்ளார். ஆனால், மனைவி டீ போட்டுத் தரத் தாமதம் ஆனதால், ஆத்திரத்தில் சத்தம்போட்டுள்ளார். இதில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் எழுந்துள்ளது. இதனால் கோபமடைந்த ஜனா, தாம் இன்று சமைக்கப் போவதில்லை என்று கூறியுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே மீண்டும் வாய்ச்சண்டை முற்றியது.

இந்நிலையில் இருவருக்கும் இடையேயான சண்டை புதன்கிழமை வரை தொடர்ந்த நிலையில், அன்று இரவு மீண்டும் வாக்குவாதம் முற்றியுள்ளது. அப்போது ஆத்திரமடைந்த மஹாலியா, தன் மனைவி ஜனாவை கூரான ஆயுதத்தால் தாக்கியுள்ளார். இதில் ஜனா ரத்த வெள்ளத்தில் உயிரிழந்துள்ளார்.

இதுகுறித்து காவல்துறையினருக்கு தெரியவந்ததையடுத்து, போலீஸார் மஹாலியாவை கைது செய்தனர்.