Published:Updated:

20 நாளில் அமைக்கப்படுகிறது திட்டக்கமிஷனுக்கான மாற்று அமைப்பு!

20 நாளில் அமைக்கப்படுகிறது திட்டக்கமிஷனுக்கான மாற்று அமைப்பு!
20 நாளில் அமைக்கப்படுகிறது திட்டக்கமிஷனுக்கான மாற்று அமைப்பு!
20 நாளில் அமைக்கப்படுகிறது திட்டக்கமிஷனுக்கான மாற்று அமைப்பு!

புதுடெல்லி: திட்டக்கமிஷனுக்கு பதிலாக உருவாக்கப்படும் புதிய அமைப்பு இன்னும் 15 முதல் 20 நாட்களுக்குள் அமைக்கப்படலாம் என செய்திகள் வெளியாகியுள்ளன.

கடந்த சுதந்திரத்தின்று செங்கோட்டையில் கொடியேற்றி பேசிய பிரதமர் நரேந்திர மோடி, ''கூட்டாட்சி தத்துவத்தை காப்பாற்றவும், மாநில அரசுகளின் நலனை காக்கவும் முடிவு செய்துள்ள நாங்கள், திட்டக்கமிஷனை மாற்றியமைக்க உள்ளோம். பழைய வீடு போல் உள்ள திட்டக்கமிஷனை புதுப்பிக்க அதிக செலவாகும் என்பதால், அதை கலைத்து விட்டு, அதற்கு பதிலாக மாற்று அமைப்பு அமைக்கப்படும்'' எனக் கூறியிருந்தார். மேலும், இதுகுறித்து பொதுமக்கள் தங்கள் கருத்துக்களை இணையதளம் மூலம் தெரிவிக்கலாம் எனவும் மோடி வேண்டுகோள் விடுத்திருந்தார்.

இந்நிலையில், திட்டக்கமிஷனுக்கு பதிலாக உருவாக்கப்பட்டுள்ள புதிய அமைப்பு இன்னும் 15 முதல் 20 நாட்களில் அமைக்கப்படலாம் என செய்திகள் வெளியாகியுள்ளன. இந்த அமைப்பில் மொத்தம் 8 பேர் உறுப்பினர்களாக இருப்பார்கள் எனவும், அதில் 4 பேர் நிரந்தர உறுப்பினர்களாக நியமிக்கப்படுவார்கள் எனவும், இந்த குழுவில் 2 பொருளாதார வல்லுநர்களும், ஒரு விஞ்ஞானியும், ஒரு சமூக ஆர்வலரும் நியமிக்கப்பட உள்ளனர் எனவும், மற்றவர்கள் அரசு துறைகளில் இருந்து நியமிக்கப்படலாம் எனவும் தெரிகிறது.

இந்த குழுவினர் தங்களது முதல் பணியாக, இந்தியாவில் உள்ள இயற்கை வளங்கள் தொடர்பான உரிமைகள் குறித்து முடிவு செய்வார்கள் எனவும் செய்திகள் வெளியாகியுள்ளன.