Published:Updated:

விநாயகர் சதுர்த்தி ஊர்வலம்: சிலை வைப்பதற்கு 23 நிபந்தனைகள்!

விநாயகர் சதுர்த்தி ஊர்வலம்: சிலை வைப்பதற்கு 23 நிபந்தனைகள்!
விநாயகர் சதுர்த்தி ஊர்வலம்: சிலை வைப்பதற்கு 23 நிபந்தனைகள்!

விநாயகர் சதுர்த்தி ஊர்வலம்: சிலை வைப்பதற்கு 23 நிபந்தனைகள்!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

விநாயகர் சதுர்த்தி ஊர்வலம்: சிலை வைப்பதற்கு 23 நிபந்தனைகள்!

சென்னை: விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சென்னையில் விநாயகர் சிலைகளை வைப்பதற்கும், அவற்றை ஊர்வலமாக எடுத்துச் சென்று கரைப்பதற்கும் 23 நிபந்தனைகளை காவல் துறையினர் விதித்துள்ளனர்.

விநாயகர் சதுர்த்தி இந்த மாதம் 29 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி,  இந்து இயக்கங்கள் விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்வதற்குரிய வேலைகளில் ஈடுபட்டுள்ளன.

விநாயகர் சதுர்த்தியன்று பிரதிஷ்டை செய்யப்படும் இந்த சிலைகள், பல்வேறு பூஜைகளுக்கு பின்னர் கடல், ஆறு போன்ற நீர்நிலைகளில் கரைக்கப்படுவது வழக்கம். சென்னையில் இந்தாண்டு விநாயகர் சதுர்த்தியையொட்டி, 1,864 சிலைகள் பிரதிஷ்டை செய்ய காவல் துறை அனுமதி வழங்கியுள்ளது.

சென்னையில், ஒரு சிலைக்கு ஒரு காவலர் என்ற ரீதியில் பெரும்பாலான இடங்களில் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பதற்றமிக்க பகுதிகளில் கூடுதலாக போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படுவர். சில இடங்களில் மட்டும் 3 சிலைக்கு ஒரு காவலர் பணியில் ஈடுபடுவார். கடந்தாண்டு எங்கு சிலைகள் வைக்க அனுமதி வழங்கப்பட்டதோ, அந்த இடங்களில் மட்டுமே இந்தாண்டும் சிலைகள் வைக்க காவல் துறை அனுமதி வழங்கியுள்ளது.


விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்துக்குப் பாதுகாப்பு அளிப்பது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் சென்னை பெருநகர காவல் துறை ஆணையர் அலுவலகத்தில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்கு கூடுதல் ஆணையர்கள் கருணாசாகர், ஆபாஷ்குமார் ஆகியோர் தலைமை வகித்தனர். இணை ஆணையர்கள் கே.சங்கர், கே.சண்முகவேல், ஆர்.திருஞானம், சி.ஸ்ரீதர் ஆகியோர் பங்கேற்றனர். மேலும், இந்து முன்னணி, விஸ்வ ஹிந்து பரிஷத், பாரத் இந்து முன்னனி, இந்து மகா சபை உள்ளிட்ட 23  இந்து அமைப்புகளைச் சேர்ந்த நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில், விநாயகர் சிலைகள் உயரம் 3 அடியில் இருந்து 14 அடி வரையே இருக்க வேண்டும். சிலையைப் பாதுகாப்பாக வைக்க குறைந்தது 5 பேர் அடங்கிய பாதுகாப்பு குழு அமைக்க வேண்டும். சிலைகள் பிரதிஷ்டை செய்யப்படும் இடம் அருகே வாகனம் நிறுத்தப்படக் கூடாது. பிற மதத்தினர் புண்படும் வகையில் பேசக் கூடாது. அனுமதிக்கப்பட்ட வழியிலேயே ஊர்வலம் செல்ல வேண்டும் என்று காவல் துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

மேலும், ஊர்வலத்தின்போது ரகளையில் ஈடுபடக் கூடாது. தேவையற்ற முழக்கங்கள் எழுப்பக் கூடாது. கடலில் சிலையைக் கரைக்க செல்லும்போது 500 மீட்டர் முன்பே சிலையைக் கரைப்போரிடம் ஒப்படைக்க வேண்டும். தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம், உயர் நீதிமன்றம் கூறியுள்ள விதிமுறைகளை கடைப்பிடிப்பது உள்ளிட்ட 23 விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என்றும் காவல் துறை உயர் அதிகாரிகள் பேசினர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு