Published:Updated:

இந்தியை முதன்மை மொழியாக கற்பிப்பது கட்டாயமல்ல: யூ.ஜி.சி. விளக்கம்!

இந்தியை முதன்மை மொழியாக கற்பிப்பது கட்டாயமல்ல: யூ.ஜி.சி. விளக்கம்!
இந்தியை முதன்மை மொழியாக கற்பிப்பது கட்டாயமல்ல: யூ.ஜி.சி. விளக்கம்!
இந்தியை முதன்மை மொழியாக கற்பிப்பது கட்டாயமல்ல: யூ.ஜி.சி. விளக்கம்!

புதுடெல்லி: இந்தியை முதன்மை மொழியாக கற்பிப்பது கட்டாயமல்ல என்று யூ.ஜி.சி. விளக்கம் அளித்துள்ளது.

ஆங்கிலத்துடன் இந்தியை முதன்மை மொழியாக கற்பிக்க பல்கலைக் கழகங்களுக்கு யூ.ஜி.சி. சுற்றறிக்கை அனுப்பியிருந்தது. இந்த உத்தரவுக்கு தமிழக முதல்வர், தி.மு.க., பா.ம.க., ம.தி.மு.க. உள்ளிட்ட அரசியல் கட்சிகள் கடும் எதிர்ப்பையும் கண்டனத்தையும் தெரிவித்தன.

இந்நிலையில், இந்தியை முதன்மை மொழியாக கற்பிக்க வேண்டும் என்ற சுற்றறிக்கையை யூ.ஜி.சி. வாபஸ் பெற்று கொண்டுள்ளது. மேலும், பல்கலைக் கழகங்களில் இந்தியை முதன்மை மொழியாக கற்பிப்பது கட்டாயமல்ல என்றும் அது தெரிவித்துள்ளது.