Published:Updated:

நியூட்ரினோ திட்டம் குறித்து அச்சம் வேண்டாம்: விஞ்ஞானிகள் விளக்கம்

விகடன் விமர்சனக்குழு
நியூட்ரினோ திட்டம் குறித்து அச்சம் வேண்டாம்: விஞ்ஞானிகள் விளக்கம்
நியூட்ரினோ திட்டம் குறித்து அச்சம் வேண்டாம்: விஞ்ஞானிகள் விளக்கம்
நியூட்ரினோ திட்டம் குறித்து அச்சம் வேண்டாம்: விஞ்ஞானிகள் விளக்கம்

மதுரை: தேனி மாவட்டம், போடியில் மேற்கொள்ள இருக்கும் நியூட்ரினோ திட்டம் குறித்து மக்கள் அச்சப்படதேவையில்லை என்று விஞ்ஞானிகள் விளக்கம் அளித்துள்ளனர்.

மதுரை அருகே வடபழஞ்சியில் இன்று நடைபெற்ற கருத்தரங்கில் பங்கேற்று பேசியபோது இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

அணுசக்தி திட்டத்துக்கும், நியூட்ரினோ திட்டத்துக்கும் சம்பந்தம் இல்லை என்று கூறிய விஞ்ஞானிகள், நியூட்ரினோ திட்டத்தின் முடிவுகள் இயற்பியலின் அடிப்படையை தெரிந்து கொள்ள உதவும் என்றனர்.

மேலும், நியூட்ரினோ திட்டத்துக்கு எந்த நாடுகளுமே காப்புரிமை கோர முடியாது என்றும் விஞ்ஞானிகள் கூறினார்.