Published:Updated:

மதிய உணவு சாப்பிட்ட 100 மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!

மதிய உணவு சாப்பிட்ட 100 மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!
மதிய உணவு சாப்பிட்ட 100 மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!
மதிய உணவு சாப்பிட்ட 100 மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!

பெங்களூரு: பெங்களூருவில் அரசு பள்ளி ஒன்றில் மதிய உணவு சாப்பிட்ட 100க்கும் அதிகமான குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பெங்களூருவில் உள்ள அரசு பள்ளி ஒன்றில், இன்று மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது. அதனை சாப்பிட்ட மாணவர்களுக்கு கடுமையான வயிற்று வலி ஏற்பட்டு,  துடித்தனர்.

அடுத்தடுத்து 100க்கும் அதிகமான மதிய உணவு உண்ட மாணவர்களுக்கு இவ்வாறு வயிற்று வலி ஏற்பட்டதை தொடர்ந்து, அவர்கள் உடனடியாக அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு மருத்துவர்கள் அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

வேறொரு இடத்திலிருந்து சமைக்கப்பட்ட உணவை எடுத்துவர பயன்படுத்தப்பட்ட பாத்திரம் அசுத்தமானதாக இருந்து, அதனால் மாணவர்களுக்கு உணவு ஒவ்வாமை ஏற்பட்டு இருக்கலாம் எனக் கூறப்படுகிறது. இருப்பினும் இதுகுறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.