Published:Updated:

நீரின்றி அமையாது உலகு...

நீரின்றி அமையாது உலகு...
நீரின்றி அமையாது உலகு...

நீரின்றி அமையாது உலகு...

நீரின்றி அமையாது உலகு என்பது வள்ளுவர் வாக்கு. ஏனெனில், நாம் வாழும் இந்த பூமி 70 சதவீதத்துகும் மேல் கடலால் சூழப்பட்டது. கடல்கள் தான் பூமியின் தட்ப வெட்ப மாறுதலில் பெறும் பங்கு வகிக்கின்றன. நாம் சுவாசிக்கும் ஆக்ஸிஜனை பெருமளவில் தருவிக்கின்றன. பல உயிரினங்களின் ஆதாரமாகவும் விளங்குகின்றன. மேலும், உலகம் முழுவதிலும் 1 பில்லியன் மக்களுக்கு மேலானோர், தாங்கள் வாழ்வதற்கு தேவையான ஊட்டசத்துகளை கடலில் இருந்து பெறுவதாக நம்புகின்றனர்.
 

நீரின்றி அமையாது உலகு...

இவ்வாறாக, ஒவ்வொரு ஜீவராசியும் வாழ்வதற்கு வகை செய்யும் கடல்களையும் அவை சார்ந்த கடற்கரைகளையும் தூய்மையாக வைத்திருக்கிறோமா? என்றால் அதற்கான பதிலும் கேள்விக்குறிதான். சுற்றுச்சூழல் என்பதும் நிலத்தில் உள்ள குப்பைகளை எல்லாம் அப்புறப்படுத்தி கடலில் கொட்டுவது அல்ல. முதலில் சுற்றுச்சூழல் என்பது கடலையும் சேர்த்துதான். நாம் அறிந்தோ, அறியாமலோ செய்யும் தவறுகள் கடலுக்கும் கடல்வாழ் உயிரினங்களுக்கும் பெரும் கேடு விளைத்து வருகின்றன. கடற்கரைகளில் நாம் தூக்கி எறியும் பிளாஸ்டிக், தெர்மாக்கோல் பொருட்களை பறவைகள், மீன் முட்டைகள் என நினைத்து உண்டு மடிகின்றன. கடலில் கலக்கும் கிரீஸ் மற்றும் எண்ணெய் பொருட்களால் மீன்களும் பிற உயிரினங்களும் சுலபமாக நீந்த முடியாமல் கொத்து கொத்தாய் இறக்கின்றன. (அறிய வகை மீன்களை எல்லாம் அழித்து விட்டு வாஸ்து மீன் வாங்கி வளர்ப்பவர்கள்தான் நாம்).
 

நீரின்றி அமையாது உலகு...

இதைக்கண்டு, நம்மிடம் இருந்து நம் கடலை காப்பதற்கு, நம்மில் கடல் மீது அக்கறை கொண்ட சிலர் கடந்த 27 வருடங்களாக ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மூன்றாம் சனிக்கிழமை, சர்வதேச கடற்கரை தூய்மை படுத்தும் நாளாக அனுசரித்து உலகம் முழுவதும் உள்ள கடற்கரைகளை தூய்மைப்படுத்தி வருகின்றனர்.

இவ்வாறாக, மதுரை காமராசர் பல்கலைக்கழக கடல் மற்றும் கடலோர ஆய்வுத்துறை, கடல் புலம் ஆராய்ச்சி நிலையம் மற்றும் ராமநாதபுரம் மாவட்ட சுற்றுச்சூழல் சங்கம் சார்பாக மன்னார் வளைகுடா பகுதியில் அமைந்துள்ள சீனியப்பா தர்கா கடற்கரையை தூய்மைப்படுத்தினர். சீனியப்பா கடற்கரை சமீப ஆண்டுகளாக சுற்றுலா பயணிகளை கவர்ந்து வரும் இடங்களில் ஒன்று. இதில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை சுமார் 400 தன்னார்வ தொண்டர்கள் பங்கேற்று கடற்கரையை தூய்மைப்படுத்தினர்.
 

நீரின்றி அமையாது உலகு...

நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் முனைவர் எம்.ஆனந்த் கூறுகையில், "சுமார் 400 தன்னார்வ தொண்டர்கள் சீனியப்பா தர்கா கடற்கரையை தூய்மைப்படுத்தினர். துப்புரவு தரவு மூலமாக கடல் மற்றும் கடல் சார்ந்த குப்பைகளின் அளவு தெரியவந்தன. கரையோர குப்பைகளில் பொதுவாக காணப்பட்டவை பிளாஸ்டிக் பாட்டில்கள், பிளாஸ்டிக் பேப்பர்கள், கண்ணாடி பாட்டில்கள், காகித கப்கள், சிகரெட் துண்டுகள் மற்றும் பிற. நம் கடற்கரைகளில் உள்ள பெரும்பாலான குப்பைகள் மனித நடவடிக்கைகளாலேயே ஏற்படுகின்றன. இக்குப்பைகள் புயல் மற்றும் சிற்றோடைகள் மூலமாக கடலுக்கு பயணமாகி கலக்கின்றன. இந்நிகழ்வில் தன்னார்வ தொண்டர்களால் எடுக்கப்பட்ட குப்பைகளில் பிளாஸ்டிக் பாட்டில்கள் 38 சதவீதம், கண்ணாடி பாட்டில்கள் 18 சதவீதம், இதர குப்பைகளான சிகரெட் துண்டுகள், ஸ்ட்ராக்கள், மூடிகள் சதவிகிதத்தின் மிச்சத்தை பூர்த்தி செய்கின்றன. மாவட்ட நிர்வாகம் இங்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு சில கடுமையான சட்டங்களையும், விதிகளையும் விதிப்பதன் மூலம் இங்கு சேரும் குப்பைகளின் அளவை குறைக்கலாம்" என்றார்.
 

நீரின்றி அமையாது உலகு...

எனவே கொள்ளையர்களையும், கொலைகாரர்களையும் பார்த்து கோபம் கொள்ளும் நாம், நம்மை அறியாமலேயே நாம் உபயோகித்து தூக்கி எறியும் பொருட்களால் கடல் வாழ் உயிரினங்களை கொன்றும், கடல் வளங்களை கொள்ளையடித்தும் வருகிறோம். வீட்டின் அழகிற்காக மட்டும் வண்ண மீன்கள் வளர்க்கும் நாம், கடலில் உள்ள மீன்களும் வாழ வழி செய்தாலே போதும், நம் வீடு மட்டும் அல்ல நாம் வாழும் பூமியே அழகாக இருக்கும்.

-ப.சூரியராஜ், படங்கள்: எஸ்.பரத்

(மாணவப் பத்திரிகையாளர்கள்
)

அடுத்த கட்டுரைக்கு