Published:Updated:

கடற்கரை தூய்மை தினம்: கடலோர காவல்படை செயலால் பொதுமக்கள் முகம்சுளிப்பு!

Vikatan Correspondent
கடற்கரை தூய்மை தினம்: கடலோர காவல்படை செயலால் பொதுமக்கள் முகம்சுளிப்பு!
கடற்கரை தூய்மை தினம்: கடலோர காவல்படை செயலால் பொதுமக்கள் முகம்சுளிப்பு!

ராமேஸ்வரம்: தூய்மையாக இருந்த கடற்கரை பகுதியை, தூய்மை படுத்திய கடலோர காவல் படையினரின் செயலை கண்டு பொதுமக்கள் முகம்சுளித்தனர்.

கடற்கரை தூய்மை தினம்: கடலோர காவல்படை செயலால் பொதுமக்கள் முகம்சுளிப்பு!

ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மாதம் 3வது சனிக்கிழமை உலக கடற்கரை தூய்மை தினம் கடைபிடிக்கப்படுகிறது. அன்றைய நாளில் உலகமெங்கும் உள்ள கடற்கரை பகுதிகளை தூய்மைப்படுத்துவது, கடற்கரை பகுதிகளை தூய்மையாக வைத்து கொள்வது குறித்த விழிப்புணர்வு பிரசாரம் மற்றும் செய்முறை விளக்கங்களில் அரசு துறையினர், கடலோர காவல் படையினர், தொண்டு நிறுவனத்தினர் மற்றும் பொது நல அமைப்பினர் ஈடுபடுவது வழக்கம்.

கடற்கரை தூய்மை தினம்: கடலோர காவல்படை செயலால் பொதுமக்கள் முகம்சுளிப்பு!

தமிழகத்தின் நீண்ட கடற்கரை பகுதியை கொண்ட ராமநாதபுரம் மாவட்டத்தில் உலக கடற்கரை தூய்மை தினம் இன்று (20ஆம் தேதி) கடைபிடிக்கப்பட்டது. இதன்படி ராமேஸ்வரத்தில் உள்ள அக்னி தீர்த்த கடற்கரை பகுதியில் தூய்மை பணி மேற்கொள்ள இந்திய கடலோர காவல் படையினர் ஏற்பாடு செய்திருந்தனர். இந்த நிகழ்சியில் இந்திய கடற்படை மற்றும் கடலோர காவல் படையினர், அரசு மேல் நிலைப்பள்ளி நாட்டு நலப்பணி திட்ட மாணவர்கள், பொது நல அமைப்பை சேர்ந்தவர்கள் மற்றும் நகராட்சி துப்புரவு பணியாளர்கள் என நூற்றுக்கணக்கானோர் பங்கேற்றனர்.

கடற்கரை தூய்மை தினம்: கடலோர காவல்படை செயலால் பொதுமக்கள் முகம்சுளிப்பு!

இதற்கென நகராட்சி துப்புரவு பணியாளர்கள் நேற்று இரவே அக்னி தீர்த்த கடற்கரை பகுதி முழுவதையும் தூய்மைப்படுத்தி பளபளவென வைத்திருந்தனர். இவ்வாறு தூய்மையாக வைக்கப்பட்டிருந்த கடற்கரை பகுதியினை கடலோர காவல் படையினர் உள்ளிட்டோர் மீண்டும் தூய்மைப்படுத்துவது போல் போஸ் கொடுத்து போட்டோ எடுத்துக் கொண்டனர். இதற்கென தனி டீ-சர்ட், தொப்பி, கையுறைகள் என சிறப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தது.

அதே நேரத்தில், ராமேஸ்வரம் துறைமுகம் அமைந்துள்ள கடற்கரை பகுதியில் மீனவர்களால் ஏற்படுத்தப்படும் கழிவுகளால் அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுவதுடன் நோய்களையும் பரப்பி வருகிறது. மனிதர்கள் கால் பதிக்கவே அஞ்சும் நிலையில் உள்ளது. இதனால் காலங்காலமாக கரையோரங்களில் வசித்து வந்த மீன்கள் தற்போது கடற்கரை பகுதிகளில் மறந்து கூட வருவதில்லை.

கடற்கரை தூய்மை தினம்: கடலோர காவல்படை செயலால் பொதுமக்கள் முகம்சுளிப்பு!

கடல் வாழ் உயிரினங்களுக்கும், மனிதர்களுக்கும் தீங்கு ஏற்படுத்த கூடிய இதுபோன்ற கழிவுகள் நிறைந்த கடற்கரை பகுதிகளை சுத்தம் செய்யும் பணியினை மேற்கொள்ளாமலும், இது போன்ற அசுத்தங்களை உருவாக்காமல் இருக்க மீனவர்கள் மத்தியில் உரிய விழிப்புணர்வுகளை ஏற்படுத்தாமல், ஏற்கனவே தூய்மைப்படுத்தப்பட்ட பகுதியையே மீண்டும் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்ட இந்திய கடலோர காவல் படையினரின் செயல் உள்ளூர் பொதுமக்களையும், சுற்றுலாப் பணிகளையும் முகம் சுளிக்க வைத்தது.

இனி வரும் காலங்களிலாவது பெயரளவில் ஈடுபடாமல் உணமையான நோக்கத்திற்காக உழைப்பார்களா?

இரா.மோகன்

படங்கள்: உ.பாண்டி