Published:Updated:

உலகின் சக்தி வாய்ந்த தொழிலதிபர்கள்: இந்திரா நூயிக்கு 3வது இடம்!

Vikatan Correspondent
உலகின் சக்தி வாய்ந்த தொழிலதிபர்கள்: இந்திரா நூயிக்கு 3வது இடம்!
உலகின் சக்தி வாய்ந்த தொழிலதிபர்கள்: இந்திரா நூயிக்கு 3வது இடம்!
உலகின் சக்தி வாய்ந்த தொழிலதிபர்கள்: இந்திரா நூயிக்கு 3வது இடம்!

லண்டன்: உலகின் சக்தி வாய்ந்த தொழிலதிபர்கள் பட்டியலில் இந்தியாவைச் சேர்ந்த இந்திரா நூயி மூன்றாவது இடம் பிடித்துள்ளார்.

உலகின் 100 சக்தி வாய்ந்த பெண்கள் பட்டியல் இன்று (20ஆம் தேதி) வெளியிடப்பட்டது. அதில், ஜி.பி.எம். நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஜின்னி ரோமெட்டி முதலாவது இடத்திலும், ஜெனரல் மோட்டார் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மேரி பார்ரா இரண்டாவது இடத்திலும் உள்ளனர்.

இந்த பட்டியலின் மூன்றாவது இடத்தில், இந்தியாவை சேர்ந்த இந்திரா நூயி (58) இடம் பெற்றுள்ளார். தமிழ் நாட்டில் பிறந்த இந்திரா நூயி, கடந்த 1994ஆம் ஆண்டு பெப்சி நிறுவனத்தில் சேர்ந்தார். இதன் பிறகு படிப்படியாக உயர் பதவிகளை எட்டிய அவர், இன்று பெப்சி நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக உள்ளார்.

மேலும், அமெரிக்க வர்த்தக நிர்வாகியாகவும் இந்திரா நூயி உள்ளார்.