Published:Updated:

அக்டோபர் 16ல் நிரந்தர பி.எஃப் கணக்கு எண்!

Vikatan Correspondent
அக்டோபர் 16ல் நிரந்தர பி.எஃப் கணக்கு எண்!
அக்டோபர் 16ல் நிரந்தர பி.எஃப் கணக்கு எண்!
அக்டோபர் 16ல் நிரந்தர பி.எஃப் கணக்கு எண்!

புதுடெல்லி: அக்டோபர் மாதம் 16ஆம் தேதி நிரந்தர பி.எஃப் கணக்கு எண் வழங்கப்படும் என செய்திகள் வெளியாகியுள்ளன.

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் சந்தாதாரர்களுக்கு பிஎஃப் கணக்கு எண் வழங்கியுள்ளது. ஒரு தொழிலாளி தான் வேலை செய்யும் நிறுவனத்தில் இருந்து வேறெரு நிறுவனத்தில் வேலைக்கு சேரும் போது அவரது பி.எஃப் கணக்கு எண்ணும் மாற்றப்படும். இதனால் அந்த தொழிலாளிக்கு நடைமுறை சிக்கல் உருவாகும். அதேபோல பி.எஃப் அலுவலகத்திலும் பணி சுமை அதிகரிக்கும். இவற்றை எல்லாம் கருத்தில் கொண்டு, பிஎஃப் சந்தாதாரர்கள் அனைவருக்கும் நிரந்தர கணக்கு எண் வழங்க முடிவு செய்யப்பட்டது.

அதன்படி, இந்த நிரந்தர பி.எஃப் கணக்கு எண் வரும் அக்டோபர் மாதம் 16ஆம் தேதி வழங்கப்படும் என செய்திகள் வெளியாகியுள்ளன. மேலும், இந்த நிரந்தர கணக்கு எண் வழங்கும் திட்டத்தை பிரதமர் நரேந்திரமோடி தொடங்கி வைக்க உள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.