Published:Updated:

தீபாவளி சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு தொடங்கியது!

விகடன் விமர்சனக்குழு
தீபாவளி சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு தொடங்கியது!
தீபாவளி சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு தொடங்கியது!
தீபாவளி சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு தொடங்கியது!

சென்னை: தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு இயக்கப்படும் சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு இன்று (5ஆம் தேதி) தொடங்கியது.

அக்டோபர் 22 ஆம் தேதி கொண்டாடப்பட தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, சென்னையில் இருந்து நெல்லை, நாகர்கோவில், ஈரோடு, கோவை என பல்வேறு பகுதிகளுக்கு சிறப்பு ரயில்களை, தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

இதுகுறித்து தெற்கு ரயில்வே விடுத்துள்ள அறிவிப்பில், ''வரும் 21ஆம் தேதி மாலை 6.10 மணிக்கு நெல்லையில் இருந்து சென்னை எழும்பூருக்கு சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. இதேபோல், 27ஆம் தேதி சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து இரவு 10.45 மணிக்கு நெல்லைக்கு சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. நாகர்கோவிலில் இருந்து அக்டோபர் 20ஆம் தேதி மாலை 5.05 மணிக்கு எழும்பூருக்கு சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயில் மறுநாள் காலை 6.15 மணிக்கு சென்னை எழும்பூர் வந்தடையும்.

மேலும், வரும் 24ஆம் தேதி சென்னை எழும்பூரில் இருந்து பிற்பகல் 3 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் மறுநாள் அதிகாலை 3.45 மணிக்கு நாகர்கோவில் சென்றயும். ஈரோட்டில் இருந்து 20ஆம் தேதி மதியம் 1.45 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில், அன்றிரவு 8.10 மணிக்கு சென்ட்ரல் வந்தடையும்.

கோவையில் இருந்து 21ஆம் தேதி காலை 9.20 மணிக்கு இயக்கப்படும் சிறப்பு ரயில், அன்று மாலை 5.35 மணிக்கு சென்ட்ரல் வந்தடையும்'' எனக் கூறப்பட்டுள்ளது.

இவை தவிர, திருநெல்வேலி, நாகர்கோவில் ஆகிய இடங்களில் இருந்து சென்னை எழும்பூருக்கு பிரிமியம் சிறப்பு ரயில்களையும் தென்னக ரயில்வே அறிவித்துள்ளது. இந்த சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு இன்று (5ஆம் தேதி) முன்பதிவு தொடங்கியது.

கட்டணம் உயர்வு

இதற்கிடையே, தீபாவளியையொட்டி அறிவிக்கப்பட்ட பிரிமியம் ரயில்களில் கட்டணமும் உயர்த்தப்பட்டுள்ளது. திருச்சிக்கு ரூபாய் 405க்கு தொடங்கிய ரயில் கட்டணம் 20 நிமிடங்களில் ரூபாய் 930ஆக உயர்ந்துள்ளது. பிரிமியம் சிறப்பு ரயில்களில் தேவை அதிகரிக்க, அதிகரிக்க கட்டணம் உயரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரிமியம் ரயிலுக்கு இணைய தளம் மூலமே முன்பதிவு செய்ய முடியும் எனவும் முன்பதிவு செய்யப்பட்ட டிக்கெட்டை ரத்து செய்ய முடியாது எனவு தெரிவிக்கப்பட்டுள்ளது.