Published:Updated:

புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சமூக வலைதள உதவியுடன் மீட்புப்பணி!

விகடன் விமர்சனக்குழு
புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சமூக வலைதள உதவியுடன் மீட்புப்பணி!
புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சமூக வலைதள உதவியுடன் மீட்புப்பணி!

ஐதராபாத்: புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சமூக வலைதளத்தின்  உதவியுடன் மீட்புப்பணியை மேற்கொள்ள ஆந்திர அரசு முடிவு செய்துள்ளது.

புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சமூக வலைதள உதவியுடன் மீட்புப்பணி!

ஹுட் ஹூட் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு மற்றும் நிவாரண பணிகளை விரைந்து மேற்கொள்ள உதவும் வகையில், பொதுமக்கள் தகவல்களை பதிவு செய்வதற்காக சமூக வலைதளத்தில் புதிய பக்கங்களை ஆந்திர அரசு தொடங்கியுள்ளது. AP DISASTER MANAGEMENT என்ற பெயரில் ஃபேஸ்புக் பக்கத்தை ஆந்திர அரசு உருவாக்கியுள்ளது.

இந்த முக நூல் பக்கத்தில், பொதுமக்கள் தங்கள் பகுதியில் ஏற்பட்டுள்ள சேதம் குறித்த புகைப்படங்களை பதிவேற்றம் செய்யலாம் என்றும், அது மீட்பு பணிகள் துரிதமாக மேற்கொள்ள உதவியாக இருக்கும் என்றும் ஆந்திர அரசு தெரிவித்துள்ளது. மேலும், ஹாஷ் குறியீட்டுடன் HUDHUD AP என்ற சொல்லை இணைத்து, பொதுமக்கள் ஃபேஸ்புக், டிவிட்டர் , கூகுள் ப்ளஸ் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பாதிப்பு குறித்த தகவல் மற்றும் புகைப்படங்களை பதிவு செய்யலாம் என்றும் ஆந்திர அரசு கூறியுள்ளது.

இதேபோல், உதவி தொலைபேசி எண்களையும் ஆந்திர அரசு அறிவித்துள்ளது. அதன்படி, விசாகப்பட்டினத்திற்கு 1800 425 00002, ஸ்ரீகாகுளத்திற்கு 1800 425 6625, விஜயநகரத்திற்கு 1070 என்ற தொலைபேசி எண்கள் உதவிகளை பெறுவதற்காக அறிவிக்கப்பட்டுள்ளன. மாநிலம் முழுவதற்கம் பொது எண்களாக 1100 மற்றும் 194 அறிவிக்கப்பட்டுள்ளது.