Published:Updated:

மவுலிவாக்கக் கட்டட விபத்து:அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவு!

விகடன் விமர்சனக்குழு
மவுலிவாக்கக் கட்டட விபத்து:அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு   உத்தரவு!
மவுலிவாக்கக் கட்டட விபத்து:அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவு!

சென்னை: மவுலிவாக்கத்தில்  கட்டப்பட்டு வந்த   அடுக்குமாடிகுடியிருப்பு இடிந்து விழுந்த விபத்து தொடர்பாக தமிழக அரசு விரிவான அறிக்கையை வரும் டிசம்பர் 4-ஆம் அன்று தாக்கல் செய்ய வேண்டும் என்று சென்னை உயர்நீதி மன்றம் உத்திரவிட்டுள்ளது.

மவுலிவாக்கக் கட்டட விபத்து:அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு   உத்தரவு!

மவுலிவாக்க கட்டட விபத்து தொடர்பாக சிபிஐ விசாரணை கோரி திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலின்  சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு விசாரணை இன்று சென்னை உயர்நீதி மன்றத்தில் நடை பெற்றது.அப்போது தமிழக அரசு சார்பில் மவுலிவாக்கக் கட்டட விபத்து தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. மேலும் இந்த விபத்து தொடர்பாக அமைக்கப்பட்ட ஓய்வுபெற்ற நீதிபதி கவுல் ரெகுபதி தலைமையிலான ஒரு கமிஷனின் விசாரணை அறிக்கையும் தாக்கல் செய்யப்பட்டது.

அப்போது  ரெகுபதி தலைமையிலான ஒரு கமிஷனின் விசாரணை அறிக்கை அவசரகோலத்தில் தயாரிக்கப்பட்டு தாக்கல் செய்யப்பட்டு உள்ளதாக மனுதாரரின் வழக்கறிஞர்  எதிர்ப்பு தெரிவித்தார்.

இதனையடுத்து, இந்த சம்பவத்தின் காரணம் குறித்தும், விபத்திற்குப் பிறகு தமிழக அரசு சார்பில் மேற்கொள்ளப்பட்ட மீட்பு, நிவாரண உதவிகள், ஆய்வு நடவடிக்கைகள், கட்டட உரிமையாளர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் உள்ளிட்டவை குறித்து விரிவான அறிக்கையை  வரும்  டிசம்பர் 4 ஆம் தேதியன்று தாக்கல் செய்ய வேண்டு என்றும்  கூறி, வழக்கை அன்றைய தினத்திற்கு ஒத்தி வைத்து உத்தரவிடார் நீதிபதி.