Published:Updated:

சென்னையில் பிளாட்பாரத்தில் தூங்கியவர்கள் மீது கார் மோதல்: கர்ப்பிணி உள்பட 3 பேர் பலி!

விகடன் விமர்சனக்குழு

சென்னை: சென்னையில் பிளாட்பாரத்தில் தூங்கி கொண்டிருந்தவர்கள் மீது கார் மோதியதில் கர்ப்பிணி பெண் உட்பட 3 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை வேளச்சேரி - தரமணி 100 அடி சாலையில் உள்ள பாரதி நகர் அருகே, நள்ளிரவுக்கு 1 மணியளவில் டி.சி.எஸ். பேருந்து நிலையம் அருகே வந்த கார் ஒன்று, கட்டுப்பாட்டை இழந்து சாலை ஓரம் நின்று கொண்டிருந்த பசு மீது மோதியதோடு, பிளாட்பாரத்தில் தூங்கிக் கொண்டிருந்தவர்கள் மீதும் ஏறி இறங்கியது. இதில் 63 வயதுடைய மூதாட்டி ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.

ஆறுமுகம் (35), அவரது மனைவி நிறைமாத கர்ப்பிணியான ஐஸ்வர்யா (29) பலத்த காயம் அடைந்தனர். அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தனர்.

காரை ஓட்டி வந்த சசிகுமாரை (25) காவல்துறையினர் கைது செய்தனர். தப்பிய அவரது நண்பர்கள் சிவகுமார் (29), தேவா ஆகியோரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

விசாரணையில், சசிகுமார் உள்பட 3 பேரும் குடிபோதையில் இருந்தது தெரியவந்துள்ளது. இந்த விபத்து குறித்து சென்னை கிண்டி காவல்துறையினர் வழக்குப்பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர்.