Published:Updated:

கௌரவ கொலையை தடுக்க தனிச் சட்டம்: மார்க்சிஸ்ட் வலியுறுத்தல்!

விகடன் விமர்சனக்குழு
கௌரவ கொலையை தடுக்க தனிச் சட்டம்: மார்க்சிஸ்ட் வலியுறுத்தல்!
கௌரவ கொலையை தடுக்க தனிச் சட்டம்: மார்க்சிஸ்ட் வலியுறுத்தல்!

தேனி: கௌரவ கொலைகளை தடுக்க தனிச் சட்டம் கொண்டு வரவேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.

உசிலம்பட்டியைச் சேர்ந்தவர் வீரண்ணன் என்பவரது மகள் விமலா தேவி. இவர் ஆசிரியை பயிற்சி படிப்பு முடித்துள்ளார். இவர் அதேபகுதியைச் சேர்ந்த திலீப்குமார் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

கௌரவ கொலையை தடுக்க தனிச் சட்டம்: மார்க்சிஸ்ட் வலியுறுத்தல்!

இதையடுத்து அவரது பெற்றோர், கடந்த செப்டம்பர் மாதம், அவர்கள் இருவரையும் போலீசார் முன்னிலையில் பிரித்து விட்டனர். அதன் பிறகு விமலா தேவிக்கு, தேனி, பூதிபுரத்தைச் சேர்ந்த சதீஷ்குமார் என்பவருடன் நிச்சயதார்த்தம் செய்யப்பட்டது.

இதையடுத்து,  விமலா தேவி சதீஷ்குமாருடன் ஜவுளி எடுக்க செல்வதாக கூறிவிட்டு, அங்கு திலீப் குமாருக்கு தகவல் தெரிவித்து வரவழைத்தார். அப்போது  தனது கணவர் திலீப் குமாருடன் செல்ல முயன்றார். இதையடுத்து ஏற்பட்ட பிரச்னையைத் தொடர்ந்து, வலத்தகுண்டு போலீசார் விமலா தேவியை மகளிர் காப்பகத்தில் அடைத்தனர். அதன்பிறகு இரண்டு நாட்கள் கழித்து கடந்த அக்டோபர் 1 ஆம் தேதி விமலா தேவியை அவரது பெற்றோர் வலுக்கட்டாயமாக அழைத்து சென்ற நிலையில், அடுத்த சில தினங்களில் விமலா தேவி மர்மமாக மரணமடைந்தார். அவரை பெற்றோர்  கௌரவ கொலை செய்து விட்டதாக குற்றம் சாட்டிய திலீப் குமார், இது தொடர்பாக காவல்துறையில் புகார் அளித்தார்.

கௌரவ கொலையை தடுக்க தனிச் சட்டம்: மார்க்சிஸ்ட் வலியுறுத்தல்!

இதற்கிடையே, விமலா தேவியை அவரது பெற்றோர் கௌரவ கொலை செய்ய திட்டமிட்டுள்ளனர் என்று கூறி மாவட்ட எஸ்.பி. விஜேந்திர பிடாரிக்கும், மாவட்ட ஆட்சித்தலைவர் சுப்பிரமணிக்கும், திண்டுக்கல் மாவட்ட எஸ்.பி.க்கும் திலீப்குமார் சார்பில் தீண்டாமை ஒழிப்பு முன்னணியினர் பதிவு தபால் மூலம் புகார் அனுப்பியிருந்தனர். இதன் பிறகு 1 வாரம் கழித்து விமலா தேவி மர்மமான முறையில் மரணமடைந்தார்.

இந்நிலையில், இந்த வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிடக்கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் இன்று (13ஆம் தேதி) மதுரை கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் சுமார் 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

இதில் கலந்து கொண்டு அக்கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் பேசுகையில், ''இந்த வழக்கை, மாநில காவல் துறை விசாரித்தால், இந்த வழக்கில் நீதி கிடைக்காது. எனவே, சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். கடந்த ஒன்பது மாதங்களில் மட்டும் தமிழகத்தில் 32 கௌரவ கொலைகள் நடந்துள்ளது. எனவே, கௌரவ கொலையை தடுப்பதற்கான தனி சட்டம் கொண்டு வரவேண்டும்'' என்றார்.

சண்.சரவணக்குமார்

படங்கள்: ஜெ.நந்தகுமார்