Published:Updated:

சென்ட்ரலில் இருந்து கோவைக்கு அதிவேக சிறப்பு ரயில் இயக்கம்!

சென்ட்ரலில் இருந்து கோவைக்கு அதிவேக சிறப்பு ரயில் இயக்கம்!
சென்ட்ரலில் இருந்து கோவைக்கு அதிவேக சிறப்பு ரயில் இயக்கம்!
சென்ட்ரலில் இருந்து கோவைக்கு அதிவேக சிறப்பு ரயில் இயக்கம்!

சென்னை: தீபாவளியையொட்டி கூட்ட நெரிசலை சமாளிக்க, சென்னை சென்ட்ரல்- கோவை மற்றும் நாகர்கோவில்- யஸ்வந்த்பூருக்கு சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

அதன்படி, கோவை- சென்ட்ரல் அதிவிரைவு சிறப்பு ரயில் (வ.எண்.06610), கோவையில் இருந்து 23ஆம் தேதி இரவு 11.30 மணிக்கு புறப்பட்டு, அடுத்த நாள் காலை 7.15 மணிக்கு சென்ட்ரலை வந்தடைகிறது.

அதே போல், மறுமார்க்கமாக, சென்ட்ரல்- கோவை (வ.எண்.06607) அதிவிரைவு சிறப்பு ரயில், சென்னை சென்ட்ரலில் இருந்து 24ஆம் தேதி காலை 10.15 மணிக்கு புறப்பட்டு, அதே நாள் மாலை 6 மணிக்கு கோவை சென்றடைகிறது.

நாகர்கோவில்- யஷ்வந்த்பூர் சிறப்பு ரயில் (வ.எண்.06597), நாகர்கோவிலில் இருந்து வரும் 22ஆம் தேதி பிற்பகல் 1.30 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் அதிகாலை 4.15 மணிக்கு யஷ்வந்த்பூர் சென்றடைகிறது.

இந்த ரயில் வள்ளியூர், திருநெல்வேலி, கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், மதுரை, திண்டுக்கல், கரூர், நாமக்கல், சேலம், தர்மபுரி, ஓசூர் மற்றும் பானஸ்வாடி ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்கிறது.

இந்த ரயில்களுக்கான டிக்கெட் முன்பதிவு இன்று காலை தொடங்கியுள்ளது.

யஷ்வந்த்பூர்- நாகர்கோவில் ‘பிரீமியம்’ அதிவிரைவு சிறப்பு ரயில் (வ.எண்.02689), யஷ்வந்த்பூரில் இருந்து 21ஆம் தேதி இரவு 9.15 மணிக்கு புறப்பட்டு, அடுத்தநாள் காலை 9.20 மணிக்கு நாகர்கோவில் சென்றடைகிறது.

இந்த ரயில், கிருஷ்ணராஜபுரம், சேலம், மதுரை மற்றும் திருநெல்வேலி ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்கிறது. இந்த ரயிலுக்கான முன்பதிவு ஏற்கனவே தொடங்கிவிட்டது.