Published:Updated:

தமிழகம் முழுவதும் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு!

விகடன் விமர்சனக்குழு
தமிழகம் முழுவதும் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு!
தமிழகம் முழுவதும் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு!
தமிழகம் முழுவதும் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு!

சென்னை/மதுரை: தமிழகம் முழுவதும் இன்று வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது.

தமிழகம் முழுவதும் அக்டோபர் 15ஆம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவின்குமார் தெரிவித்திருந்தார். அதன்படி, சென்னை உள்பட தமிழகம் முழுவதும் வரைவு வாக்காளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது.

மதுரை மாவட்டத்திலுள்ள பத்து சட்டமன்ற தொகுதிகளுக்கும் வரைவு வாக்காளர் பட்டியலை மாவட்ட ஆட்சியர் இல.சுப்ரமணியன் வெளியிட்டார்.

இதில் ஆண் வாக்காளர்கள் 12,02,373 பேரும், பெண் வாக்காளர்கள் 12,14, 345 பேரும், 3ஆம் பாலினம் 78 பேரும் இடம்பெற்றுள்ளனர். மொத்தம் 24,16,756 வாக்காளர்கள் உள்ளனர்.

சென்னையில் ஆண்கள் 18,84,228 பேரும், பெண்கள் 18,91,519 பேரும், 3ஆம் பாலினம் 719 பேர் என மொத்தம் 37,76,466 வாக்காளர்கள் உள்ளனர்.

நெல்லையில் ஆண்கள் 11,70,510 பேரும், பெண்கள் 11,82,746 பேரும், 3ஆம் பாலினம் 25 பேர் என மொத்தம் 23,53,281 வாக்காளர்கள் உள்ளனர்.

கன்னியாகுமரியில் ஆண்கள் 7,39,328 பேரும், பெண்கள் 7,23,044 பேரும், 3ஆம் பாலினம் 70 பேர் என மொத்தம் 14,62,442 வாக்காளர்கள் உள்ளனர்.

சேலத்தில் ஆண்கள் 13,56,306 பேரும், பெண்கள் 13,25,103 பேரும், 3ஆம் பாலினம் 201 பேர் என மொத்தம் 26,75,610 வாக்காளர்கள் உள்ளனர்.

திருச்சியில் ஆண்கள் 10,14,803 பேரும், பெண்கள் 10,41,330 பேரும், 3ஆம் பாலினம் 87 பேர் என மொத்தம் 20,56,220 வாக்காளர்கள் உள்ளனர்.

திருவண்ணாமலையில் ஆண்கள் 9,11,365 பேரும், பெண்கள் 9,21,233 பேரும், 3ஆம் பாலினம் 14 பேர் என மொத்தம் 18,32,612 வாக்காளர்கள் உள்ளனர்.

நாமக்கல்லில் ஆண்கள் 6,40,337 பேரும், பெண்கள் 6,56,153 பேரும், 3ஆம் பாலினம் 49 பேர் என மொத்தம் 12,96,539 வாக்காளர்கள் உள்ளனர்.

திண்டுக்கல்லில் ஆண்கள் 8,09,313 பேரும், பெண்கள் 8,21,269 பேரும், 3ஆம் பாலினம் 107 பேர் என மொத்தம் 16,30,689 வாக்காளர்கள் உள்ளனர்.

அரியலூரில் ஆண்கள் 2,36,130 பேர், பெண்கள் 2,36,559 பேர் என மொத்தம் 4,72,689 வாக்காளர்கள் உள்ளனர்.

பெரம்பலூரில் ஆண்கள் 2,48,183 பேரும், பெண்கள் 2,53,183 பேரும், 3ஆம் பாலினம் 27 பேர் என மொத்தம் 5,01,393 வாக்காளர்கள் உள்ளனர்.

திருவள்ளூரில் ஆண்கள் 4,69,371 பேரும், பெண்கள் 4,65,668 பேரும், 3ஆம் பாலினம் 7 பேர் என மொத்தம் 9,35,066 வாக்காளர்கள் உள்ளனர்.

கரூரில் ஆண்கள் 3,97,002 பேரும், பெண்கள் 4,13,672 பேரும், 3ஆம் பாலினம் 29 பேர் என மொத்தம் 8,10,703 வாக்காளர்கள் உள்ளனர்.

மேலும், புதுச்சேரி மாநிலத்தில் ஆண்கள் 4,29,411 பேரும், பெண்கள் 4,67,688 பேரும், 3ஆம் பாலினம் 20 பேர் என மொத்தம் 8,97,119 வாக்காளர்கள் உள்ளனர்.

அடுத்த மாதம் 10ஆம் தேதி வரை புதிதாக வாக்காளர்கள் பதிவு செய்யவும், பெயர் நீக்கவும், தொகுதி மாற்றவும், பிழை திருத்தவும் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று ஆட்சியர் அறிவித்துள்ளார்.

-செ.சல்மான்