Published:Updated:

திண்டுக்கல்-கொடைக்கானல் சாலையில் நிலச்சரிவு: போக்குவரத்து பாதிப்பு!

திண்டுக்கல்-கொடைக்கானல் சாலையில் நிலச்சரிவு: போக்குவரத்து பாதிப்பு!
திண்டுக்கல்-கொடைக்கானல் சாலையில் நிலச்சரிவு: போக்குவரத்து பாதிப்பு!

திண்டுக்கல்: திண்டுக்கல்-கொடைக்கானல் சாலையில் நிலச்சரிவு ஏற்ப்பட்டுள்ளதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

திண்டுக்கல்-கொடைக்கானல் சாலையில் நிலச்சரிவு: போக்குவரத்து பாதிப்பு!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், நேற்று இரவு பெய்த கனமழையால் திண்டுக்கல்-கொடைக்கானல் சாலையில் 'டம் டம்' பாறையில் இருந்து நிலச்சரிவு ஏற்பட்டு பாறைகள் உருண்டு விழுந்தது.

திண்டுக்கல்-கொடைக்கானல் சாலையில் நிலச்சரிவு: போக்குவரத்து பாதிப்பு!

இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. சாலை மிக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால் அதை சீர் செய்ய 15 நாட்களுக்கு மேல் ஆகும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

நிலச்சரிவு காரணமாக தற்போது மாற்றுப் பாதையாக செம்பட்டி, சித்தரேவு, தாண்டிக்குடி வழையாக பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. பழனி-கொடைக்கானல் சாலையும் மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளது. கனமழை தொடர்ந்தால், கொடைக்கானலுக்கான அத்தனை பாதைகளுமே போக்குவரத்துக்கு தடைபட வாய்ப்புள்ளது.

செய்தி, படங்கள்: ஆர்.குமரேசன்