Published:Updated:

ஸ்ரீரங்கத்தில் ஆசியாவின் மிகப்பெரிய வண்ணத்துப் பூச்சி பூங்கா!

 ஸ்ரீரங்கத்தில் ஆசியாவின் மிகப்பெரிய வண்ணத்துப் பூச்சி பூங்கா!
ஸ்ரீரங்கத்தில் ஆசியாவின் மிகப்பெரிய வண்ணத்துப் பூச்சி பூங்கா!

திருச்சி: ஸ்ரீரங்கத்தில் ஆசியாவிலேயே மிகப்பெரிய வண்ணத்துப் பூச்சி பூங்கா அமைக்கப்பட்டு வருகிறது.

 ஸ்ரீரங்கத்தில் ஆசியாவின் மிகப்பெரிய வண்ணத்துப் பூச்சி பூங்கா!

ஸ்ரீரங்கம் மேலூரில், ஆசியாவிலேயே மிகப் பெரிய வண்ணத்துப் பூச்சிகளின் நந்தவனம், ரூபாய் 9 கோடி செலவில் அமைக்கப்பட்டு வருகிறது. இயற்கை எழில் கொஞ்சும் ஸ்ரீரங்கத்தில், காவிரியும் கொள்ளிடமும் ஒன்று சேரும் அழகிய இடத்தில் 25 ஏக்கர் பரப்பில் இந்த வண்ணத்துப் பூச்சிகளின் பூங்கா அமைக்கப்படுகிறது.

 ஸ்ரீரங்கத்தில் ஆசியாவின் மிகப்பெரிய வண்ணத்துப் பூச்சி பூங்கா!

இந்த பூங்காவில் வண்ண வண்ண பூச்செடிகள், அழகிய புல்தரைகள், பல்வேறு வகையான மரங்களும் இடம் பெற்றுள்ளது மேலும் சிறப்பு சேர்க்கிறது. வண்ணத்துப் பூச்சிகள் இனப்பெருக்கம் செய்வதற்கு ஏற்ற சூழலும் இந்த பூங்காவில் ஏற்படுத்தப்பட்டுள்ளது. வன்னத்துப் பூச்சி, மற்ற பூச்சிகளின் வடிவங்கள், கல்மரங்களில் பொறிக்கப்பட்டுள்ளன. சிறுவர் பூங்கா மற்றும் நீறூற்றுக்கள் பூங்காவில் அமைக்கப்பட்டுள்ளன.

 ஸ்ரீரங்கத்தில் ஆசியாவின் மிகப்பெரிய வண்ணத்துப் பூச்சி பூங்கா!

இங்கு, இரண்டு தொங்கு பாலங்களும், 27 நட்சத்திரங்களுக்கு உரிய 27 வகை மரங்களை அமைத்து நட்சத்திர வனம் அமைக்கப்பட்டு வருகிறது. ஊட்டியில் ஆண்டுதோறும் நடத்தப்படும் மலர் கண்காட்சி போல் ஸ்ரீரங்கத்திலும் நடத்தப்பட உள்ளது.

 ஸ்ரீரங்கத்தில் ஆசியாவின் மிகப்பெரிய வண்ணத்துப் பூச்சி பூங்கா!

இந்த பூங்காவிற்குள் நுழையும் சுற்றுலா பயணிகள் மீது ஒருவித வாசனை திரவியம் ஸ்பிரே செய்யப்பட உள்ளது. அப்போது வண்ணத்துப்பூச்சிகள் நம் உடம்பில் வந்து ஒட்டிக்கொள்ளும். அதனை புகைப்படம் எடுப்பதற்கும் அனுமதி அளிக்கப்பட உள்ளது.



செய்தி, படங்கள்: தே.தீட்ஷித்