Published:Updated:

அரசு வழங்கிய இலவச லேப்-டாப் இணைய தளத்தில் அமோக விற்பனை!

விகடன் விமர்சனக்குழு
அரசு வழங்கிய இலவச லேப்-டாப் இணைய தளத்தில்  அமோக விற்பனை!
அரசு வழங்கிய இலவச லேப்-டாப் இணைய தளத்தில் அமோக விற்பனை!
அரசு வழங்கிய இலவச லேப்-டாப் இணைய தளத்தில்  அமோக விற்பனை!

மொரதாபாத்: உத்தரப்பிரதேச மாநில அரசு, மாணவர்களுக்கு இலவசமாக அளித்த லேப்-டாப்கள் இணையத்தில் அமோகமாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

தனியார் பள்ளி ஆசிரியர் ஒருவர் இலவச லேப் - டாப்பை  இணையதளம்  மூலம் ரூ.14,000 க்கு விற்றபோது இது தெரியவந்தது.

இது தொடர்பாக,  மொரதாபாத்  மாவட்ட பள்ளி ஆய்வாளர் சர்வன் குமார் யாதவ் கூறுகையில், "இச்சம்பவம் குறித்து முறையான விசாரணை மற்றும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மாணவர்கள் இலவச மடிக்கணினிகளை விற்பதை மாநில அரசு தடுப்பது சுலபமல்ல. வேண்டுமானால், மாணவர்களிடம் இலவசமாக வழங்கப்பட்ட லேப்-டாப்பை அவர்களின் வருங்காலத்தை ஒளிமயமாக அமைத்துக்கொள்ள பயன்படுத்தும்படி அறிவுரை வழங்கலாம்" என்றார்.

உத்தரப்பிரதேசத்தில் 2012 ஆம் ஆண்டு அம்மாநில முதல்வர்  அகிலேஷ் யாதவால் தொடங்கப்பட்ட  இந்த `இலவச லேப்-டாப்  `திட்டத்தின் மூலம், மொரதாபாத் மாவட்டத்தில் மட்டும்,  ரூ. 19,000 மதிப்புள்ள   24,143 லேப்-டாப்புகள்  வழங்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.