Published:Updated:

கனிமவள முறைகேடு அனைத்தையும் சகாயம் விசாரிக்க கோரி வழக்கு!

Vikatan Correspondent
கனிமவள முறைகேடு அனைத்தையும் சகாயம் விசாரிக்க கோரி வழக்கு!
கனிமவள முறைகேடு அனைத்தையும் சகாயம் விசாரிக்க கோரி வழக்கு!
கனிமவள முறைகேடு அனைத்தையும் சகாயம் விசாரிக்க கோரி வழக்கு!

சென்னை: தமிழகம் முழுவதும் நடந்த அனைத்து கனிமவள முறைகேட்டையும் ஐஏஎஸ் அதிகாரி சகாயம் விசாரிக்க கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடரப்பட்டுள்ளது.

பசுமை தாயம் அமைப்பு சார்பில் உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ள பொது நல மனுவில், மதுரையில் நடந்த கிரானைட் முறைகேடு பற்றி மட்டுமே விசாரிக்க சகாயம் நியமிக்கப்பட்டுள்ளார் என்றும், சட்ட விரோத அனைத்து வகையான கனிமவள முறைகேடு குறித்து விசாரிக்க உத்தரவிட வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

இந்த மனு உயர் நீதிமன்றத்தில் விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.

தமிழகத்தில் நடந்த அனைத்து கனிமவள முறைகேடு பற்றி விசாரிக்க கோரி டிராபிக் ராமசாமி ஏற்கனவே மனுத் தாக்கல் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.