Published:Updated:

கருணாநிதியை தொடர்ந்து சங்கரய்யாவை சந்தித்தார் ஈ.வி.கே.எஸ்!

Vikatan Correspondent
கருணாநிதியை தொடர்ந்து சங்கரய்யாவை சந்தித்தார் ஈ.வி.கே.எஸ்!
கருணாநிதியை தொடர்ந்து சங்கரய்யாவை சந்தித்தார் ஈ.வி.கே.எஸ்!

சென்னை: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்தத் தலைவர் என்.சங்கரய்யாவை, தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் சந்தித்து பேசினார்.
 

கருணாநிதியை தொடர்ந்து சங்கரய்யாவை சந்தித்தார் ஈ.வி.கே.எஸ்!

தி.மு.க. தலைவர் கருணாநிதியை அண்மையில் தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் திடீரென சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு குறித்து செய்தியாளர்களிடம் பேசிய இளங்கோவன், தமிழகத்தின் மூத்த அரசியல் தலைவர் என்ற முறையில் அவரை சந்தித்ததாக தெரிவித்தார்.

இந்நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், சுதந்திரப் போராட்ட வீரருமான என்.சங்கரய்யாவை, இன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு அலுவலகத்தில்   ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் மரியாதை நிமித்தமாக சந்தித்தார்.

இச்சந்திப்பின்போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்களும், காங்கிரஸ் கட்சித் தலைவர்களும் இருந்தனர்.