Published:Updated:

போதையில் ஏரியில் விழுந்து இறந்தவர் உடலை மீட்ட கண் தெரியாதவர்!

Vikatan Correspondent
போதையில் ஏரியில் விழுந்து இறந்தவர் உடலை மீட்ட கண் தெரியாதவர்!
போதையில் ஏரியில் விழுந்து இறந்தவர் உடலை மீட்ட கண் தெரியாதவர்!

சென்னை: குடிபோதையில் குறுக்கு வழியில் வீட்டிற்கு செல்கிறேன் எனக் கூறி, ஏரியில் விழுந்து இறந்தவரின் உடலை, கண் தெரியாத மாற்றுத்திறனாளி மீட்ட சம்பவம் வேளச்சேரியில் நடந்துள்ளது.

போதையில் ஏரியில் விழுந்து இறந்தவர் உடலை மீட்ட கண் தெரியாதவர்!

வேளச்சேரி, ஹவுசிங் போர்டு யூனிட்டை சேர்ந்த முனுசாமி (45) நேற்று இரவு ஒரு இறுதி ஊர்வலத்தை முடித்து விட்டு, குடிபோதையில், ஹவுசிங் போர்டில் உள்ள தனது வீட்டிற்கு சென்றிருக்கிறார். ஏரிக்கு பின்புறம் இருக்கும் தன் வீட்டிற்கு, ஏரியை நீந்தி குறுக்கு வழியில் செல்வதாக கூறி, திடீரென ஏரியில் இறங்கி நடக்க ஆரம்பித்தாராம். சிறுது நேரம் கழித்து அவர் கைகளை மட்டும் உயர்த்தியபடி சத்தம் போட்டதாகக் கூறப்படுகிறது.

போதையில் ஏரியில் விழுந்து இறந்தவர் உடலை மீட்ட கண் தெரியாதவர்!

இதுகுறித்து தகவல் அறிந்து அந்த இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினரும், தீயணைப்பு துறையினரும் இரவு முழுவதும் போராடியும்  முனுசாமியை மீட்க முடியவில்லை. மீண்டும் இன்று அதிகாலையில் வேளச்சேரி ஆய்வாளர் சேகர் பாபு தலைமையில் தேடுதல் பணி தொடங்கியது.

சிறுது நேரம் கழித்து சுந்தர்ராஜ் என்பவர் அழைத்து வரப்பட்டிருக்கிறார். அவர் ஏரியில் இறங்கிய சுமார் 30 நிமிடங்களில் முனுசாமியின் உடலை இறந்த நிலையில் கரைக்கு கொண்டு வந்து சேர்த்திருக்கிறார். பின்பு முனுசாமியின் உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறது.

போதையில் ஏரியில் விழுந்து இறந்தவர் உடலை மீட்ட கண் தெரியாதவர்!

சுந்தர்ராஜ் யார்?

ஜல்லடைப்பேட்டையில் வசித்து வரும் சுந்தர்ராஜ், ஒரு மாற்றுத்திறனாளி. அவருக்கு கண் பார்வை கிடையாது. இருப்பினும், சிறு வயதிலிருந்தே நீச்சலில் கை தேர்ந்தவர். இதற்கு முன்பும் பள்ளிகரணை, ஆதம்பாக்கம் போன்ற ஏரிகளில் மூழ்கியவர்களை காப்பாற்றியவர் சுந்தர்ராஜ் என்பது குறிப்பிடத்தக்கது.

-நெல்சன் மத்தேயு

படங்கள்: பிரின்ஸ்

(மாணவப் பத்திரிகையாளர்)