Published:Updated:

வண்டலூர் பூங்காவில் இருந்து 2 புலிகள் தப்பி ஓட்டம்: பொதுமக்கள் அச்சம்!

சென்னை: வண்டலூர் பூங்காவில் இருந்து இரண்டு புலிகள் தப்பிச் சென்றுவிட்டதாகக் கூறப்படுகிறது.

சென்னை வண்டலூர் புலிகள் அடைக்கப்பட்டுள்ள பகுதியில் இருக்கும் சுற்றுச்சுவர், கனமழை காரணமாக இடிந்து விழுந்துவிட்டது. இதன் காரணமாக பூங்காவில் இருந்து 5 புலிகள் தப்பிச் செல்ல முயன்றதாகவும், அவற்றில் மூன்று புலிகளை வனத் துறையினர் உடனடியாக மயக்க ஊசி போட்டு பிடித்துவிட்டதாகவும் தெரிகிறது.

இந்நிலையில், இரண்டு புலிகள் மட்டும் தப்பி ஓடிவிட்டதாக தகவல் பரவியதால், அப்பகுதியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. இதனால் தாம்பரம் வனத் துறையினர், நடைபயணம் மேற்கொள்ள வேண்டாம் என வண்டலூரைச் சுற்றியுள்ளவர்களை அறிவுறுத்தியுள்ளனர்.

மேலும், தப்பி ஓடிய புலிகள், உயிரியல் பூங்காவின் வளாகத்தில் உள்ளதா? இல்லை பூங்காவை விட்டு வெளியே சென்று விட்டதா? எனத் தெரியாமல் வனத்துறை அதிகாரிகளும், உயிரியல் பூங்கா அதிகாரிகளும், புலிகளை தீவிரமாக தேடி வருகின்றனர். ஆனாலும், மக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை என்று வனத் துறையினர் தெரிவித்துள்ளனர்.